டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த டெல்லி-டேராடூன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

டெல்லியிலிருந்து டேராடூனுக்கு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் உத்தராகண்ட் மாநிலத்தின் கன்ஸ்ரே ரயில் நிலையம் அருகே தீடிரென தீப்பிடித்து உள்ளது. ரயிலின் C4 கம்பார்ட்மென்ட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது.

அந்த பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெட்டியில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் உடன்டியாக கீழே இறக்கி விடப்பட்டனர். யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லபயணிகள் வெளியேறிய சிறிது நேரத்தில் சி-4 பெட்டி முற்றிலும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். எனினும், பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார்
