கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இவற்றுள் இரண்டு தொகுதிகளை தவிர்த்து மற்ற அணைத்து தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வருகிற 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஜெயா நகருக்கு தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக வேட்பாளர் காலமானதால் ஜெயநகர் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வருகிற 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Karnataka Elections Voting Today

காங்கிரஸ் பாஜக போட்டி

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இம்முறை, காவேரி பிரச்சனை கர்நாடகா தெரிதலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றே அறியப்படுகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 222 தொகுதிகளில், மொத்தம் 4 கோடியே 96 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர். இவற்றுள், 15 லட்சம் இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஆயிரத்து 469 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றம் மிக்கவையாக கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 50 ஆயிரமும் பேரும், மாநில போலீசார் ஒரு லட்சம் பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். மதுபானக் கடைகளை நாளை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Karnataka State Election Results

யாருக்கு வெற்றி?

வாக்கு எண்ணிக்கை, இம்மாத 15-ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போதுவரை கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்து வந்தது. பாஜகவும் அம்மாநிலத்தில் பலம்வாய்ந்த கட்சியாகவே உள்ளது. இதனால் இவ்விரு கட்சிகளுக்கிடையில் ஆட்சியை பிடிக்கும் போட்டி பலமாகவே உள்ளது.

இருப்பினும், இந்த தேர்தலில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தெரியவரும்.


Polling has started today in Karnataka for assembly elections. Out of 224 constituencies for 222 constituencies the voting is held today. For Jaya Nagar the polling postponed as the BJP candidate of this constituency had died and for R.R.Nagar the voting will be on 28th May as 10,000 election cards were seized by Election Department recently. Vote counting process will be on May 18th and results will be announced on the same day.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course