நாள்தோறும் ஆயிரம் இரயில்வே ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்திய இரயில்வேயில் 13 லட்சம் ஊழியர்களைக் கொண்ட மிகப்பெரிய துறையாகும்.

இது குறித்து பேசிய ரயில்வே வாரிய தலைவர் சுமித் சர்மா தங்களிடம் மருத்துவமனைகள் உள்ளன எனவும், படுக்கை வசதிகளை அதிகரித்தது மட்டுமன்றி ரயில்வே மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை உருவாக்கி உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் நான்காயிரம் படுக்கைகளில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கடந்த மார்ச் மாதம் முதல் 1952 ரயில்வே ஊழியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர் எனவும் குறிப்பிட்டார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






