ராஷ்டிரிய லோக் தள கட்சியின் தலைவர் அஜித் சிங் கடந்த ஏப்ரல் 20ஆம் நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விபி சிங், பீவி நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் அமைச்சரவையில் இவர் இடம் பெற்றிருந்தார். முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித்சிங் 7 முறை மக்களவை எம்பியாக இருந்தார்.
அஜித்சிங் உத்தரபிரதேச அரசியலில் நுழையும் முன் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றி இருந்தார். அஜித்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News