இந்தியாவில் 10 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைவார்கள் – தி லான்செட் இதழ்

இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு 4 லட்சம் பேரைத் தாண்டி அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நொடிக்கும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என இந்திய மருத்துவ குழு தெரிவிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தலா 40 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நாள் தோறும் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குரையே இல்லை அப்படி யாராவது ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக செய்தி பரப்பினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக கூறுவது பொய்யாகவும் இருக்கலாம் ஏனென்றால் எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாக இருக்கக்கூடும்.

இதுதவிர மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், ஏப்ரல் மாத தொடக்கத்தில் 11 மாநிலங்களில் மட்டுமே அதிக பாதிப்புகள் காணப்பட்ட நிலையில் தற்போது 17 மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து விட்டதாக மத்திய அரசு தகவல்களைத் தருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா நிலவரம் குறித்து உலக மருத்துவ இதழான தி லான்செட்(the lancet) ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இரண்டாவது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் பலமுறை எச்சரித்தும் மோடி அரசு அதை அலட்சியப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரிக்க தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று  முடிவுறும் தருவாயில் இருப்பதாக மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்ததாகவும் இந்த இதழ் கூறியுள்ளது.

கொரோனா தொற்றை இந்தியா வென்று விட்டதாகவும் ஹெர்ட் இம்முனிட்டி எனப்படும் கூட்டு எதிர்ப்புத்திறன் மக்களிடையே உருவாக்கி விட்டதாகவும் தவறான தகவலை மத்திய அரசு வெளியிட்டு வந்ததாக கூறி உள்ள லென்செட் இதழ் நாட்டில் 21 விழுக்காடு பேர் மட்டுமே எதிர்ப்புத்திறன் கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறிவிட்டு நிலையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் பதிவுகளை ட்விட்டரில் நீக்குவதன் மூலம் நரேந்திர மோடி அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக ஏலனமாக விமர்சித்துள்ளது.

சூப்பர்  ஸ்ப்ரெட்ர்ஸ் ஈவன் எனப்படும் கொத்துக் கொத்தான கொரோனா பரவல்கள் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தபோதும் கும்பமேளா போன்ற மத விழாக்களையும், பெரும் கூட்டத்துடன் அரசியல் பேரணிகளையும் மத்திய அரசு அனுமதித்து வந்ததாகவும் லான்செட் இதழ் குற்றம்சாட்டியுள்ளது.

கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய அரசு மேற்கொண்ட பரப்புரை தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு குறைந்து விட்டதாகவும் இதனால் வெறும் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் லான்செட் இதழ் சுட்டிக்காட்டி உள்ளது. கொரோனா தொற்று பரவலை திடீரென எதிர்கொள்ள உத்தரபிரதேசம் மற்றும்மகாராஷ்டிர மாநிலங்களில் தயார் நிலையில் இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் இல்லாமை, பிணங்களை எரிப்பதற்கு எரிமலைகள் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டதாகவும் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கேட்டவர்கள் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை காட்டி மிரட்ட வருவதாகவும் லான்செட் இதழ் குற்றம் சாட்டி உள்ளது.

அதே வேளையில் கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டதால் போதுமான ஆக்சிஜன் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டதாக அந்த இதழ் பாராட்டியுள்ளது. கொரோனா காலத்தில் வெளிப்படையாக விவாதங்களை முன்னெடுக்காமல் தன் மீதான விமர்சனங்களை தடுக்க மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை என்று கூறி உள்ள லான்செட் இதழ் ஆகஸ்ட் ஒன்றாம் நாளுக்குள் 10 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைவார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளதாகவும் அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கு மோடி அரசாங்கமே முழு பொறுப்பு என்றும் கடுமையாக சாடியுள்ளது. 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course