ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சே இந்தியாவில் COVID-19 நிவாரணத்திற்காக 110 கோடி நிவாரண நிதியாக தர முன் வந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் பேட்ரிக் டோர்சே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தொகையை மூன்று தன்னார்வ நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்தியாவின் தன்னார்வ நிறுவனங்களான கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் யுஎஸ்ஏ ஆகிய தன்னார்வ நிறுவனங்களுக்கு மூன்றாக பிரித்து தரப்படும்.
$15 million split between @CARE, @AIDINDIA, and @sewausa to help address the COVID-19 crisis in India. All tracked here: https://t.co/Db2YJiwcqc 🇮🇳
— jack (@jack) May 10, 2021
இந்த நிதியானது ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்ட்டிலேட்டர்கள் ஆகியவற்றை அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் கொரோனா மையங்களுக்கும் வழங்க பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
I’m moving $1B of my Square equity (~28% of my wealth) to #startsmall LLC to fund global COVID-19 relief. After we disarm this pandemic, the focus will shift to girl’s health and education, and UBI. It will operate transparently, all flows tracked here: https://t.co/hVkUczDQmz
— jack (@jack) April 7, 2020