கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு பெற்றோர்களை பறிகொடுத்து ஆதரவற்ற குழந்தைகளாகிற நிலை பல இடங்களில் உள்ளது. இது போன்று கணவரை இழந்து மனைவி தவிப்பதும், பிள்ளைகளை மூத்த குடிமக்கள் இழந்து நிர்கதியாக நிற்பதும் நடைபெறுகிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவர்களை பாதுகாக்க வேண்டிய சமூகக் கடமை முக்கியமானதாக இருக்கிறது.
இது குறித்து குடும்ப நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள அறிவுரை குறிப்பில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் குறிப்பாக பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் மீது மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு தேவையான வசதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உதவியும், ஆதரவு தேவைப்படும் மூத்த குடிமக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு தற்போது கிடைத்த வசதிகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மாவட்டங்களில் காவல் நிலையங்கள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுகளில் பெண்களைக் கொண்டு உதவும் அமைப்பை ஏற்படுத்தி திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






