மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி 

திமுகவின் வெற்றிக்கு பல  அரசியல் தலைவர்களும், பிரபலங்களும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில்  மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறி  கொரோனாவை ஒழிக்க இணைந்து பாடுபடுவோம் என தனது ட்விட்டர் பக்கத்தில்  கூறியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியையும், மாநிலத்தின் தேவைகளையும் கருத்தில்  கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரீட்வீட் செய்து, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு ரீட்வீட் செய்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas