இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனை அறியாத சில சர்வதேச ஊடகங்கள் தவறாக விமர்சிக்கின்றன. இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கண்டித்துள்ளார்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து பொது மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவது என்பது சவாலானது. இதனை அறியாமல் சர்வதேச ஊடகங்கள் தேவையில்லாமல் விமர்சிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். அதில் தமிழகத்தை ஆன்மிக தலமாக கருதுகிறேன்.
என் மீது அன்பு செலுத்திய இந்திய நாட்டு மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நானும் சக வீரர்களும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க பல முறை இந்தியா வந்துள்ளோம். இப்படி இந்தியாவை பல ஆண்டுகளாக கூர்ந்து கவனித்தவன் என்ற முறையில், தற்போது இந்திய மக்கள் படும் வேதனை மற்றும் சர்வதேச ஊடகங்களின் தவறான விமர்சனத்தை பார்க்கும் போது என் இதயம் இரத்தம் சிந்துகிறது.
பல்வேறு கலாசாரம் கொண்ட இந்த இந்திய நாட்டை வழி நடத்தும் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். ஆனாலும் பத்திரிகைளில் வந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் 16 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய மக்கள் தொகைக்கு 5 மடங்கு சமம்.
Extracts from a heartfelt blog on India by @HaydosTweets A cricketer whose heart is even bigger than his towering physical stature. Thank you for the empathy and your affection… pic.twitter.com/h671mKYJkG
— anand mahindra (@anandmahindra) May 14, 2021
தினமும் 13 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் சவாலான பணிகள் நடக்கின்றன. இவற்றை சாதாரணமாக எடை போடாதீர்கள் மற்றும் வீணாக விமர்சிக்காதீர்கள் என்று ஹைடன் கண்டித்துள்ளார்.