21 அமைச்சர்களுடன் பினராயி விஜயன் இன்று முதல்வராக பதவியேற்பு!

கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
Corona impacts 14 more in Kerala: Cheif Minister Pinarayi Vijayan || கேரளாவில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல் மந்திரி பினராயி விஜயன்
இந்த கூட்டத்தில் இடதுசாரி கூட்டணியில் ஈடுபட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிதாக பதவி ஏற்க இருக்கும் மந்திரிகளுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது.
திருவனந்தபுரதில் இன்று  பிற்பகல் 3.30 மணிக்கு முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பதவி ஏற்று கொள்கிறார். அதை தொடர்ந்து மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்.

1.பினராயி விஜயன் – முதலமைச்சர், உள்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொது நிர்வாகம்
2.எம்.வி.கோவிந்தன் – உள்ளூர் சுய அரசுத் துறை, கலால்
3.கே ராதாகிருஷ்ணன் – தேவசோம், எஸ்சி / எஸ்டி வளர்ச்சி
4.சஜி செரியன் – மீன்வளம், கலாச்சாரம்
5.கே.என்.பாலகோபால் – நிதியமைச்சர்
6.பி ராஜீவ் – கைத்தொழில் மற்றும் வணிகத் துறை
7.வி.என் வாசவன்-கூட்டுறவுத் துறை மற்றும் பதிவு
8.வி சிவன்குட்டி – கல்வி அமைச்சர்
9.முஹம்மது ரியாஸ் – பி.டபிள்யூ.டி, சுற்றுலா, இளைஞர் நலன்
10.டாக்டர் ஆர் பிந்து – உயர்கல்வி அமைச்சர்
11.வீணா ஜார்ஜ் – சுகாதார அமைச்சர்
12.அப்துல் ரஹ்மான் – சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் என்.ஆர்.கே.
13.ரோஷி அகஸ்டின் – நீர்வளத் துறை
14.ஜே சின்ச்சுரானி – சட்ட அளவியல், பால் மேம்பாடு மற்றும் கால்நடை பராமரிப்பு
15.ஆண்டனி ராஜு – போக்குவரத்து
16.கே கிருஷ்ணன்குட்டி – மின்சாரம்
17.ஏ.கே.சசீந்திரன்- வனத்துறை
18.பி பிரசாத்- விவசாயம்
19.கே ராஜன் – வருவாய் துறை
20.ஜி ஆர் அனில்- சிவில் சப்ளைஸ்
21.அகமது தேவர்கோவில் – துறைமுகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course