தென்னிந்திய உணவுகளில் கீரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய கீரை வகைகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. கீரை வகைகளை நாம் அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள ஆக்சாலிக் அமிலம், நமது உடலில் உள்ள கால்சியத்துடன் இணைந்து , அது நமது குடல் பகுதிகளில், ஆக்சலேட்களாக மாறி விடுகின்றன. இத்தகைய உப்புகள், கால்சியம் உறிஞ்சுதலை கட்டுப்படுத்தி விடுவதால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
கீரைகளில் ஆக்சாலிக் அமிலம் …

நம்மில் பலருக்கு தெரியாத ஒன்று கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இத்தகைய உணவு வகைகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்வதால் , அது நமது உடலில் கால்சியம் ஆக்சலேட்டாக படிகிறது. இது சிறுநீரக கற்கள் தோன்றுவதின் ஆரம்ப நிலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சலேட் படிந்துள்ளதன் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலைக்கு, ஹைபர்ஆக்ஸலூரியா என்று பெயர்.
ரத்தம் உறைதலுக்கு உதவுகிறது..

மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், கீரை வகைகளில், அதிகளவில் வைட்டமின் கே உள்ளது. ரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த கீரை வகைகள் தீமை பயப்பவையாக உள்ளன. அதேபோல், குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடன், கீரையில் உள்ள வைட்டமின் கே இணைந்து, ரத்த அழுத்தத்தை மிகவும் குறைந்த அளவு கொண்டதாக மாற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.
வாய்வு பிரச்சினைகளை உருவாக்கும்…

மருத்துவ ஆய்வுகளில் நாம் நமது உணவில் மிகவும் அதிகளவில் கீரை வகைகளை சேர்த்துக் கொண்டால், நமது உடலில் வாய்வு பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. கீரை வகைகளை, நமது உடல் செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதன்காரணமாக, வளர்சிதை மாற்றம் தடைபடுகிறது.
வயிற்று பிரச்சினைககளை தருகிறது…

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிகளுக்கு ஏற்ப கீரை வகைகளில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால், கீரையை செரிமானம் ஆக நீண்ட நேரம் பிடிக்கிறது. இது செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆவதால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது பேதி மற்றும் காய்ச்சல் ஏற்பட காரணமாக அமைகிறது.
நாம் உண்ணும் உணவில் கீரையை சேர்த்து உண்பது வழக்கம் , அத்தகைய கீரையை அன்றைய நாளின் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். கீரை வகைகளை, உங்களது காலை உணவின் ஒரு பகுதி ஆகவோ உண்டு மகிழலாம். இது உங்களை நீண்ட நேரம் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.
உறக்கத்திற்கு உதவும்….

மருத்துவர்கள் கூறுகையில், இரவு உணவில் நாம் கீரை வகைகளை எடுத்துக் கொண்டால், இரவு நேர உறக்கம் சிறப்பானதாக இருக்கும். மதிய உணவில் கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், மாலைநேரத்தில், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்நாக்ஸ் போன்ற சிற்றுண்டி வகைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






