சிறுநீரகக் கற்கள் இருந்தால் தோன்றும் அறிகுறிகள்!

 

இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக பிரச்சினைகள் முன்பைவிட அதிக அளவில் காணப்படுகிறது. நம்முடைய தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் முக்கிய காரணம்.

 

 

சிறுநீரகக்கல் என்றால் என்ன?

உணவு மற்றும் உடலில் இருந்து வெளியேறும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறுவது சிறுநீரகம் வழியாக தான். சிறுநீரகக்கல் என்பது சிறிய அளவிலான படிகங்களாகும். இதில் உள்ள தனிமங்களின் கூட்டுச் சேர்க்கையை பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது. சிறுநீரக கற்களானது சிறுநீரகம் மற்றும் சிறுநீரக பாதையில் கூட தோன்றும்.

அடர்கரைசலாகும் சிறுநீர்் போதிய அளவு வெளியேறாமல்  சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும்தனிமங்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்களாக மாறலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. கால்சியம், சிஸ்டைன், யூரிக் அமிலம் மற்றும் ஸ்டுவரைட் வகைகளால் ஆன சிறுநீரக கற்கள் தோன்றுகிறது.

 

 

சிறுநீரகக்கல் இருப்பதற்க்கான அறிகுறிகள்:

* விலாவில் ஆரம்பித்து இடுப்பு வரை வலி

*சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்

*அடிவயிற்றில் தாங்கவியலாத வலி

*வலியுடன் சிறுநீர் கழித்தல்

*இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்

*ஆணின்  இனப்பெருக்க உறுப்பான டெஸ்டிஸில்  வலி

*சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக அடர் மஞ்சள் மற்றும் நாற்றம் வீசும்.

எப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்?

சிறுநீரககற்கள் இருப்பதற்கான அறிகுறிகளோ,  சிறுநீர் கழிப்பது வலியுடன் கூடியதாக இருந்தாலோ, அனுதினம் வெளியேற்றப்பட்ட சிறுநீரின் அளவு குறைந்தாலோ, அல்லது சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும். தாங்க முடியாத வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

தடுப்பு முறைகள்:

*சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால்

*அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். 

*பொதுவாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும். 

*சிறுநீரக கற்களின் தன்மையை பொருத்து மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* உப்பு நிறைய சேர்த்த சிப்ஸ்கள் , கோலா பானங்கள் , கருவாடு,டின் உணவுகளை தவிர்க்கவும்.

* மருந்துகள், மாத்திரைகளால் வந்த சிறுநீரக கல் என்றால் உங்கள் மருத்துவரை அணுகி பக்கவிளைவுகள் அற்ற மாத்திரைகளை மாற்றி உட்கொள்ள வேண்டும்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women