அனைவரும் உறங்கும் போது ஒருவரது குறட்டை ஒலி மற்றவர்களுக்கு தொல்லையாக தான் இருக்கும். வெளிநாடுகளில் தம்பதியர்களிடையே விவாகரத்து வரை சென்றுள்ளது. குறட்டையை தடுக்க முடியும் அதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

குறட்டை என்பது சுவாசம் மூலம் உள்ளிழுக்கும் காற்று மூக்கிலிருந்து வாய் வழியாக மூச்சுக் குழாய்க்கு செல்லும் போது ஏதேனும் தடை ஏற்பட்டால் குறட்டை வருகிறது.
உறங்கும் போது மட்டும் ஏன் குறட்டை வருகிறது?
உறங்கும் போது தொண்டை தசைகள் தளர்வடைந்து விடும். இதனால் மூச்சுப் பாதையின் அளவு குறுகலாகிவிடுகிறது. குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்லும்போது ஏற்படும் சத்தம் தான் குறட்டை ஒலியாக வரும். மல்லாந்து படுத்து உறங்கும்போது, நாக்கு தளர்வடைந்து சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடுவதால், மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.
குறட்டை வருவதற்கான காரணங்கள் :
- சளியுடன் கூடிய மூக்கடைப்பு
- ஒவ்வாமை
- சைனஸ் தொல்லை
- அடினாய்டு, டான்சில் வளர்ச்சி
- மூக்கு இடைச்சுவர் வளைவு
- தைராய்டு பிரச்சினை
- உடல் பருமன்
- தொப்பை
- கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது
- புகை பிடிப்பது
- மது குடிப்பது
- உறங்கும் நிலை
குறட்டை விடுவது ஆபத்தை விளைவிக்குமா?
குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி குறட்டை ஒலி அதிகரித்து குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது ‘அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா’ (Obstructive Sleep Apnea) எனப்படும். ஒரு மணி நேர உறக்கத்தில் ஐந்து முறையாவது இந்த OSA ஏற்படும்.
அரிதாக சில நேரங்களில், OSA ன் போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முழுவதும் நின்றுவிடும் அபாயம் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும்.
