நூறு வயசுக்கு மேல் வாழ இவ்வளவு தான் பண்ணனுமா!!!!!

நம்ம எல்லாருக்குமே இருக்கும் ஒரு பேராசைன்னு கூட சொல்லலாம் நான் நூறு வயசு வரைக்கும் வாழனும் அப்டின்றது, ஆசீர்வாதம் பண்ணுனா கூட நூறு வயசு நல்ல இருங்க அப்டின்னு தான் பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணுவாங்க, அப்படி நூறு வயசு வாழ என்னதான் பண்றது அப்படினா!!!!!

ஜப்பானிய பழமொழி இதுக்கு என்ன சொல்லுதுன்னா “எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமே நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற தாகத்தை உங்களுக்கு தோற்றுவிக்கும்”. இதை தான் எல்லா மொழி வல்லுனர்களும் சொல்லிட்டு வராங்க. 

அது மட்டும் அல்லாமல் ஜப்பானிய மொழியில் இக்கிகய் என்ற சொல்லுக்கு, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது தரும் மகிழ்ச்சி என்று நாம் மொழிபெயர்க்கலாம். ஜப்பானிய மக்களுக்கு  வயது ஏறிக் கொண்டிருக்கும் போதே இளமையாக இருக்கும் கலையை கற்று வைத்திருந்தனர்.

அவர்கள் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதிலிருந்து எப்போதும் ஓய்வு என்பது பெறுவதில்லை. இக்கிகய் தத்துவம் லோகோ சிகிச்சையை போன்றது தான் என்றாலும் அதையும் தாண்டிய ஒன்று. ஜப்பானியர்கள் அதிலும் ஒக்கனா தீவில் இருக்கும் மக்கள் அசாதாரணமாக நீண்ட ஆயுளுக்கான காரணத்தை அது விளக்குகிறது. அத்தீவில் வசிப்பவர்கலில் ஒரு லட்சம் பேருக்கு 24.55 பேர் என்ற கணக்கில் நூறு வயதை தாண்டியவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது உலக சராசரியை விட பன்மடங்கு.

உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களை விட இங்கு வசிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழ்வது எப்படி என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்,  அதற்க்கு அம்மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம், திறந்தவெளியில் அதிக நேரம் செலவிடுவதை உள்ளடக்கிய ஓர் எளிமையான வாழ்க்கைமுறை, பசுந்தேநீர் அருந்துதல், மித வெப்பமண்டல பகுதியில் வாசித்தல் போன்ற முக்கியமான காரணங்களோடு வேறொரு காரணமும் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவர்களுடைய வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற இக்கிகய் தத்துவம் தான். 

இதில் இன்னுமொரு ஆயுளுக்கான எதிரியை சொல்கிறார்கள்… அது என்ன என்று பார்க்கலாம் வாங்க 

மனஅழுத்தம்: நீண்ட ஆயுளுக்கான எதிரி!

அநேக மக்கள் தங்களுடைய உண்மையான வயதைக் காட்டிலும் மூத்தவர்களாக தெரிகின்றனர். முன்கூட்டியே அடைகின்ற இத்தகைய மூப்பிற்கு மனஅழுத்தம் முக்கிய பங்காற்றுகிறது. ஏனெனில், நெருக்கடியான இந்த காலகட்டத்தில் நம் உடல் மிகவும் வேகமாகத் தளர்வடைகிறது. இது குறித்து ஆராந்துள்ள அமெரிக்க மன அழுத்த அமைப்பு, மனிதர்களின் பெரும்பாலான உடல்நலப் பிரச்னைகளுக்குப் மன அழுத்தம் தான் காரணம் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது. 

மனஅழுத்தம் எவ்வளவு மோசமானது பாருங்கள்… ஆனால் இன்றைக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வாயில் கூட சுலபமாக வரும் வார்த்தை டென்ஷன் டென்ஷன் இந்த வார்த்தை கொரோனவை விட வேகமாக பரவி வருகிறது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top