தங்களின் ஆக்சிஜன் அளவை அடிக்கடி சரிபார்த்தல் என்பது கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு அவசியமான ஒன்று , உடலில் ஆக்சிஜன் அளவு 94 % அதிகமாக இருக்க வேண்டும், அப்படி ஆக்சிஜன் அளவு குறைவதாக தெரிந்தால் நோயாளியை கவிழ்ந்து படுத்து ஆக்சிஜனை அதிகப்படுத்தும் ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்க வேண்டும்.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறை கவிழ்ந்து படுத்து ஆக்சிஜனை அதிகப்படுத்தும் முறையை படிப்படியாக மேற்கொள்ள ஆலோசனை வழிகாட்டியை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இம்முறையை மருத்துவ ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இம்முறை கண்டிப்பாக கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு பயன் தரும்
நோயாளிகள் இம்முறையை செயல்படுத்துவதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :-
கவிழுந்து படுத்து ஆக்சிஜனை அதிகப்படுத்தும் முறைக்கு 5 தலையணைகள் தேவைப்படுகிறது , ஒன்று கழுத்து கீழ் , இரண்டு மார்புக்கு மேல் மற்றும் இரண்டு முழங்கால்களுக்கு கீழே இருக்க வேண்டும்.

1) வயிற்று பகுதி கீழே அழுத்தி கவிழ்ந்து படுக்க வேண்டும்
2) வலப்பக்கமாக ஒருக்களித்து படுக்க வேண்டும்
3) கால்களை முன்னாடி நீட்டிக்கொண்டு உட்கார வேண்டும்
4 ) இடப்பக்கம் ஒருக்களித்து படுக்க வேண்டும்
5 ) திரும்பவும் வயிற்று பகுதி கீழே அழுத்தி படுக்க வேண்டும்
இம்முறை பயிற்சியில் ஒவ்வொரு நிலைக்கும் 30 நிமிடங்களுக்கு மேல் செலவிடக் கூடாது
பயிற்சியில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை:
- சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்து செய்ய வேண்டும்
- ஒரு நாளைக்கு 16 மணி நேரம் முடிந்த அளவுக்கு பல முறை முயற்சிக்க வேண்டும் ,தங்களால் முடியும் வரை கவிழ்ந்து படுக்க வேண்டும் .
- உடலின் காயம் மற்றும் எலும்பு பகுதியில் அதிக அழுத்தத்தை தவிர்க்கலாம்
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்த நபர்கள் (ரத்தம் உறையும் நபர்கள் ) செய்யக்கூடாது
- முதுகு எலும்பு , இடுப்பு எலும்பு , தொடை எலும்பு முறிவு மற்றும் பலவீனம் ஆனவர்கள் செய்யக்கூடாது
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






