அதிக வெப்பம் கொண்ட கோடை காலத்தில் சருமம் நிறைய பாதிப்புகளுக்கு ஆளாகிறது. அதிலும் முகம், கண்கள் போன்றவை விரைவில் சேதம் அடையும். இதை தடுக்க நிறைய தண்ணீர் குடிப்பதோடு, கோடை காலத்திற்கு ஏற்றவாறு மிதமான உணவு முறை, மற்றும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு கொள்வதும் ஒரு நல்ல வழிமுறை.

வெள்ளரி மற்றும் தயிர் பேக்:
ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அத்துடன் 50 மிலி தயிர் மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

வெள்ளரிக்காயின் சாறு சரும பாதிப்புகளை குணமாக்குகிறது. வெயிலால் கருத்த சருமத்தை அதன் இயல்பு நிலைக்கு திரும்ப செய்கிறது. இந்த பேஸ்பேக் சருமத்துக்கு புத்துணர்வை அளித்து வறட்சி ஏற்படுத்தாமல் மென்மையாக பராமரிக்க உதவுகிறது. வெள்ளரிக்காயை வட்ட வட்டமாக வெட்டி இரவு தூங்க செல்லும் முன் கண்களில் வைத்து படுத்தால், கண்ணின் கருவளையம் நீங்கி, கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்:
ரோஸ் வாட்டர் – 5 டீஸ்பூன், தேன் – 3 டீஸ்பூன், தயிர் – கால் கப் மூன்றையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.

ரோஸ் வாட்டர் சருமத்தின் எண்ணெய்பசையை கட்டுப்படுத்துகிறது. கோடைக்காலங்களில் முகத்தை புத்துணர்ச்சியாக்க வைத்திருக்கிறது. இதில் தேன் மற்றும் தயிர் இரண்டுமே சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. எண்ணெய் பசை வறட்சிக்கு எதிராக போராடுகிறது.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு காம்பினேஷன் சருமமாக இருக்கவும் வாய்ப்புண்டு. அதாவது டிமண்டலம் (நெற்றி, மூக்கு, கன்னம்) போன்ற பகுதிகளிலும் வாய் மற்றும் கன்னங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் வறண்டு இருக்கும். இவர்களுக்கும் இந்த ஃபேஸ் பேக் உதவக்கூடும்.
சந்தனம் பன்னீர் பேக் :

சந்தனம், பன்னீர், மற்றும் கொஞ்சமாக மஞ்சள் சேர்த்து முகத்தில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் கழுவி, பன்னீரை கொஞ்சம் முகத்தில் அப்ளை செய்து வந்தால், வெயிலினால் ஏற்படும் வறட்சி குறைந்து முகம் பளபளக்கும்.சந்தனம் முகத்தில் எண்ணெய் பசையை குறைக்கும், மஞ்சள் தேவையற்ற கிருமிகளை அகற்றும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






