சேலத்தில் கொரோனா தொற்றுக்கு சிறப்பு கவனத்தை செலுத்தி அசத்தி வரும் அரசு சித்த மருத்துவ மையம்

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சேலத்தில் உள்ள சிறப்பு மருத்துவமான அரசு “சித்த மருத்துவ” மையத்தில் சிறப்பான சிகிச்சை வழங்கவுதுடன், அன்புடன் கவனித்துக் கொள்வதாக சொல்கிறார்கள் சிகிச்சையில் குணம் பெற்றவர்கள்.

பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் கொரோனா தோற்றால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு  சிறந்த சிகிச்சை அளிக்கும் விதமாக சேலத்தில் உள்ள  “உத்தமசோழபுரத்தில்” அரசு சித்த மருத்துவ  மையம் தற்காலிகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்த மருத்துவ மையத்தில் தற்போது கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று நலமுடன் வீட்டுக்கு சென்ற பலர், இந்த மருத்துவ முகாம்  சிறப்பாக நடத்தப்படுவதாகவும், இம்மையத்தை இன்னும் பெரிதாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். 

சித்த மருத்துவ முகாமில் தற்போது சிகிச்சை பெற்று சண்முகவேல் என்ற நபர்  வீடு திரும்பி சென்ற   நிலையில் அவர்களின் பிரதிநிதியாக பேசினார். “நான் புகைப்படக் கலைஞர்”ஆவணப்பட இயக்குநர். அதனால் பல்வேறு மக்களிடம் நெருங்கிப் பழகுவது உண்டு. இந்நிலையில்  இரவு கடுமையான உடம்பு வலி, தலைவலி, உட்காய்ச்சல் இருந்தது. ஒரு நிமிடம் கூட  தூங்கவில்லை. கொரோனா பாதித்து குணமானவங்ககிட்ட விசாரிச்சேன்.

அப்போது அவர்கள் கூறுகையில் எங்களுக்கும் இப்படித்தா கொரோனா தொற்று இருந்தது, எதுக்கும் ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்துடுனு சொன்னாங்க. டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது  கொரோனா தொற்று உறுதியானது எனக்கு தெரிஞ்சது. பின்னர் சிகிச்சை பெறுவதற்கு  சேலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில்  சித்த மருத்துவ சிகிச்சை மையத்திற்கு சென்றேன். அங்கு 65 படுக்கைகளும் நிரம்பிட்டதா சொன்னாங்க.

கசாயம் வழங்குதல்

இதையடுத்து  கருப்பூரில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அரசு பொறியியல் கல்லூரியில் நடந்து வந்தது அந்த மையத்துக்கு சென்று பார்த்தபோது அங்க சுத்தமான குடிநீர் வசதி இல்லை. பின்பு  சுகாதாரமான கழிவறை இல்ல. லைட் இல்ல. அசுத்தமான, உடைந்த படுக்கையும், பாதுகாப்பற்ற சூழலும் இருந்தது. ஊழியர்களோ. மருத்துவர்களோ முறையாக கவனிக்காததால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். 

பிறகு சேலத்தில் உள்ள “உத்தமசோழபுரத்தில்” அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஒரு படுக்கை காலியாக இருப்பதை தெரிந்து அங்க போனேன். அங்கு நான் போனதும் மருத்துவர்களும் ஊழியர்களும் அன்போடும் கனிவோடும் கனிவாக பேசி சிகிச்சை அளித்து வந்தாங்க . பின்னர் 24 மணி நேரமும் நம்மை பார்த்துக் கொண்டு, அர்ப்பணிப்போடு வேலை பார்த்தாங்க அதுமட்டுமில்லாமல் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை இருந்தது. திடீர்னு காய்ச்சல், இருமல் மற்றும் தலைவலி வந்தால் உடனடியாக சிகிச்சை கொடுத்து  மருந்து, மாத்திரைகள், தைலம், டானிக் கொடுத்து பணிவிடை செய்கிறார்கள். 

பின்பு சத்தான உணவுகள், விளையாட்டு, மூச்சுப்பயிற்சி என வழங்குவதோடு இவ்விடத்தை  நோயாளிகளின் இடமாக  இல்லாமல்  புத்துணர்வு மையமாக கண்காணித்து வந்தார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏழு நாட்களில் நான் குணமாகி வீடு திரும்பினேன் இந்த சிறப்பு வாய்ந்த இந்த மையத்தை இன்னும் பெரிதாக்க வேண்டும் என்று கூறினேன். 

சித்த மருத்துவர்-வெற்றி வேந்தன்

பின்பு இந்த முகாமில் உள்ள சித்த மருத்துவரும் தொடர்பு அலுவலருமான வெற்றிவேந்தனிடம் பேசினோம். ”எங்கள் மையத்தில் 65 படுக்கைகள் உள்ளன. மேலும் இங்கு “வென்டிலேட்டர்” வசதியில்லாததால் 60 வயதுக்கு குறைவான நபர்களையும், கொரோனா கட்டுக்குள் இருக்கும் நோயாளிகளையும் அனுமதித்தோம். பின்பு அவர்களுக்கு முதலில் கொரோனா அச்சம் காரணமாக தொற்று பரவியிருக்கும் உளவியல் சிக்கலை நீக்குகிறோம்.

வெறும் வயிற்றில் காலை எழுந்ததும் மஞ்சள், உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்பளிக்க சொல்வோம் .பின்பு  மூச்சுப்பயிற்சி, கபசுரக் குடிநீர், 9 மணிக்கு மேல் பரிசோதனை, உடனே காலை உணவு, 10 மணிக்கு தேன், இஞ்சி சாற்றில் கலந்து குடிக்கும் பைரவ மாத்திரைகள் என்று தருவதோடு பிறகு நடை பயிற்சி, வாசிப்பு, விளையாட்டு நடத்துவோம் 

அதன் பிறகு நண்பகல் 12 மணிக்கு “புரதச்சத்து” மிகுந்த சுண்டல், 1.30 மணிக்கு மதிய உணவு, 3.30 மணிக்கு சுவையான மூலிகை டீ, 4 மணிக்கு மீண்டும் சுண்டல், மாலை 5 மணிக்கு பரிசோதனை, இதைத் தொடர்ந்து விளையாட்டு பயிற்சி என இரவு 7 மணிக்கு நிலவேம்புக் கசாயம், 8 மணிக்கு இரவு உணவு உண்பதற்கு வழங்குவோம். 

இந்த மாதிரி நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கண்காணித்து பரிசோதனை நடத்தி வருவோம் . பின்னர் திடீரென காய்ச்சல், இருமல், தலைவலி எனப் புதிதாக தொந்தரவு ஏற்பட்டால் மூன்று நிமிடங்களுக்குள் அட்டண்ட் செய்து தீர்வு காண வேண்டும் என்ற வரைமுறையும் வைத்திருக்கிறோம்” என்றார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women