நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மாஸ்க் அணியாதவர்ளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மேலும்,20 பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தவிர, போலீசார் ஒருங்கிணைப்புடனும் மாஸ்க் அணியாதவர்களை கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாளில் மட்டும் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில், மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். மாஸ்க் அணியாமல் கொரோனா பரவலுக்கு வழி வகுப்பவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து, 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். என்றார்.
