கறிவேப்பிலையில் ஒளிந்திருக்கும் மருத்துவப் பயன்கள்!

இந்திய சமையல் முறைகளில் கறிவேப்பிலைக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் தனித்துவமான நறுமணம்  உணவிற்கு வாசனையையும், ருசியையும் கூட்டும். நமது தென்னிந்திய சமையல்களில் கறிவேப்பிலையை தவிர்த்து விட்டு நம்மால் கறி, கூட்டு, சாம்பார், ரசம், பொரியல், கலவை சாதங்களை செய்ய முடியுமா?

Hidden Benefits of Curry Leaves

“கறிவேம்பு இலை”, என்பதே மருவி கறிவேப்பிலை ஆகிவிட்டது. இது ஒரு புதர்ச்செடி‌.  இலைகள் தடித்தும், சிறியதாக கரும்பச்சை நிறத்தில் காணப்படும்.இதன் சிறப்பு மிக்க நறுமணம் கறிவேப்பிலைக்கென்றே உள்ளது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் கொத்தாகப் பூக்கும். இதன் கறுப்பு நிற பழங்கள் பறவைகளின் விருப்ப உணவு.

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் :
கறிவேப்பிலையில் பாஸ்பரஸ், வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி கால்சியம் மற்றும் இரும்புச்சத்து, கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள், அமினோ அமிலங்களான கிளைகோஸைட்ஸ், செரின், அஸ்பார்டிக் அமிலம், அலனைன், புரோலைன் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.

கறிவேப்பிலையின் மணத்திற்கும் சுவைக்கும் இவைகள் தான் காரணம். இவ்வாறு பல்வேறு சத்துக்களையும் மருத்துவக் குணங்களையும் கொண்ட கறிவேப்பிலை உடலிற்கு பலத்தையும், எலும்புகளுக்குச் சக்தியினையும் அளிக்கிறது.

இதன் அளவிடமுடியாத மருத்துவப் பயன்கள் தெரிந்த நம் முன்னோர்கள் இதனை நாம் அனுதினமும் உட்கொள்ள வேண்டும் என்று தான், நமது அன்றாட சமையலில் இடம்பெறும் வகையில் ஏற்படுத்தி உள்ளார்கள். சில குறிப்பிட்ட மருத்துவப் பயன்கள் பற்றி பார்ப்போம்.

* இரத்த சோகைக்கு அருமருந்து
பெரும்பாலான இந்திய பெண்களுக்கு மாதவிடாய் உதிரப்போக்கு, கர்ப்ப காலம், மெனோபாஸ் என்று அவளது ஆயுள் முழுவதும் போதிய போஷாக்கான உணவு இல்லாததால் இரத்த சோகையில் தான் அவதிப்படுகின்றனர். உடற்சோர்வு, கை, கால் வலிகள், உடல் பலவீனம், மூச்சு வாங்குதல் என பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் அவதிப்படுகின்றனர்.

கறிவேப்பிலையில் உள்ள மிதமிஞ்சிய இரும்பு சத்தும், ஃபோலிக் அமிலமும் இரத்த சிவப்பணுக்களை பெருக்கம் அடையச் செய்கிறது.விலைஉயர்ந்த பழங்கள், அசைவ உணவுகள் மட்டும் அல்ல, நம் வீட்டு கொல்லையில் உள்ள கறிவேப்பிலை கூட மாமருந்து தான்.

* வயிறு உபாதைகள் குறையும்
கறிவேப்பிலையில் உள்ள ஆல்கலாய்டுகள் வயிற்றில் உள்ள பாக்டிரியாக்களை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

இதிலுள்ள நார்ச்சத்தால் மலச்சிக்கலை குணமாக்குகிறது. வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு குடித்தால் செரிமானத்தை தூண்டும் வகையில் செயலாற்றுகிறது.

* கண்பார்வை ‌கோளாறுகள் குறையும்

Curry Leave Benefits for Eye

கறிவேப்பிலையில் உள்ள விட்டமின்கள் குறிப்பாக விட்டமின் ஏ கண் பார்வை கோளாறுகளுக்கு தீர்வாகிறது.

* புற்றுநோய் சிகிச்சையில் ஒன்றான கீமோதெரபியால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைக்க தினசரி கறிவேப்பிலை சாறு அருந்தச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

* கால்சியம் அதிகம் உள்ளதால் மூட்டுகளுக்கு வலு சேர்க்கும்.

Use Curry Leaves for Hair Growth

* கூந்தல் வளர்ச்சி தைலங்கள் அனைத்திலும் கறிவேப்பிலை சாறு உண்டு. இளநரையை தடுக்கிறது.

முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க‌ நீங்கள் கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும்.

* இதயத்திற்கு வலுவூட்டும் கறிவேப்பிலை
கறிவேப்பிலை இலைகளில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் உடலில் உள்ளக் கொழுப்புச்சத்துகளில் கெட்ட கொழுப்பு உருவாகுவது பெரிய அளவில் குறைக்கப்படலாம் என்பதாகும். கெட்ட கொழுப்பு உருவாகுவதற்குப் பதிலாக உயரடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பு அல்லது நல்ல கொழுப்பின் உற்பத்தியை அதிகரிக்க கறிவேப்பிலை உதவி செய்கிறது. அதிலும் குறிப்பாகத் தமனித் தடிப்பு அல்லது இரத்த குழாயில் கொழுப்பு படிதல் (Atherosclerosis) மற்றும் இதர நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.

ஒட்டுமொத்த உடல் நலத்தை பேண வேண்டும் எனில் கறிவேப்பிலையை உணவில் இருந்து தூக்கி எறியாமல் உட்கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை உண்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு இல்லை. ஆனால் உங்களின் சுவைக்கு ஏற்ற அளவினை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


Curry leaves(“Karuveppilai” in Tamil) has an important role in Indian dishes. It has good aromatic property. No South Indian dish can be found without curry leaves. It is highly recommended to eat daily because numerous medicinal properties. It is used to treat anemia mostly in women, stomach disorders, atherosclerosis and other heart diseases. It improves eye sight and hair growth. Juice of curry leaves is recommended to take daily in order to reduce the side effects of Chemotherapy(One of the cancer treatment). It has several nutritional properties such as Vitamin A, B, B2, C, Calcium, Carbohydrate, Iron, Protein, Mineral salts, Amino acids, etc.


scroll to top