பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை மாணவர்கள், மாணவிகள், தனித்தேர்வர்கள், திருநங்கைகள், சிறைக்கைதிகள் என மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் எழுதியிருந்தனர்.

SSLC 2018 Results

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்தும் முடிவுற்று, மதிப்பெண்கள் பட்டியல் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, அவைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இன்று காலை 9.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in, மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. tnresults.nic.in என்ற இணையதளம் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை வெளியிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் தெரிவித்த தகவல்கள்:

  • இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.5%
  • கடந்த ஆண்டை விட 0.1% தேர்ச்சி அதிகரிப்பு
  • 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5,584
  • 5,456 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன
  • மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 3 சதவீதம் உயர்வு
  • 98.5% தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டம் முதலிடம்
  • ஈரோடு மாவட்டம் 2ஆம் இடம்; விருதுநகர் மாவட்டம் 3ஆம் இடம்
  • தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 28ஆம் தேதி மறுத்தேர்வு எழுதலாம்
  • மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
  • தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்க பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Directorate of Government Examinations, Government of Tamil Nadu, Tamil Nadu SSLC are released today on the official results websites www.dge.tn.nic.in and or www.dge.tn.gov.in. TN SSLC results (10th std) can also be accessed on tnresults.nic.in.


scroll to top