ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக புதியதாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் கூறுகையில், ” தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ள நிலையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் உரிமையாளாரான அணில் அகர்வால் ஒரு வீடியோவை தனது டிவீட்டரில் பதிவேற்றியுள்ளார். அதில், தான் மீண்டும் அனுமதிபெற்று, ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவேன் என்று பேசியுள்ளார்.

Sterlite Owner Anil Agarwal

அதில் அவர் பேசியிருப்பதாவது, “நேற்று நடந்த சம்பவத்தை அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன். இது முற்றிலும் எதிர்பாராமல் நடந்த சம்பவம், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆலை தற்போது மூடப்பட்டிருப்பது வருடாந்திர நிகழ்வு. ஆலையை மீண்டும் இயக்குவதற்காக, நாங்கள், நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம். மேலும், நாங்கள் நீதிமன்றம் மற்றும் அரசின் ஆணைகளை உறுதியாக கடைபிடித்து வருகிறோம்.

நாங்கள் எப்பொழுதும், தூத்துக்குடி மக்களும் மற்றும் அங்கு வாழும் சமுதாயமும் எங்களோடு சேர்ந்து செழிப்போடு வளர்வதை உறுதிசெய்துள்ளோம்.

தூத்துக்குடி மக்களின் விருப்பதோடும், அவர்களின் வளர்ச்சியோடும் நான் இந்த தொழிலை (ஆலையை) தொடர விருப்பப்படுகிறேன் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறிக்கொள்கிறேன், நான் தூத்துக்குடி, மற்றும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியிலும், சுற்றுச்சூழலிலும் மிகுந்த அக்கறையுடன் உள்ளேன். மேலும், நான் (மண்ணின்) நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவேன்.

நேற்று நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வழியில் உள்ளேன், நன்றி” – இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.


இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை, தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலையை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என மாவட்ட ஆட்சியர் கூறுவதும், வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் கூறுவதும், தூத்துக்குடியில் கமாண்டோ படைகள் அணிவகுப்பு நடத்துவதும், இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதுமென முரணான சூழல் நிலவி வருவதால், ஸ்டெர்லைட் சம்பந்தமான எந்த முடிவிற்கும் பொதுமக்கள் வராத ஒரு குழப்பநிலையே உள்ளது.


Founder and chairman of Vedanta Resources Plc. Anil Agarwal has expressed his sorrow over deaths of Tuticorin violence that killed 13 people during a police shootout. People of Tuticorin district are protesting against Sterlite due to environmental crises caused by this copper company. However, Anil Agarwal has tweeted that he will restart the company with clearance from court & government as the company is shutdown only for scheduled annual maintenance. More news in Tamil on Sterlite protest..


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course