முககவசம் அணிந்து உடற்பயிற்சி செய்யலாமா ? முக்கியமாக தெரிஞ்சிக்க வேண்டியவை…

உடற்பயிற்சியின்போது “முகக்கவசம்”  அணிய வேண்டுமா?  என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.இதனால் “முககவசம்” போட்டுகொண்டு  தீவிர உடற்பயிற்சி செய்யலாமா? என்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

முககவசம் அணிவது சரியா?

உடற்பயிற்சிபோது “முககவசம்” தேவையா,இல்லையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.  கடுமையான உடற்பயிற்சியின்போது முககவசம் அணிவதால்  சுவாசம் சார்ந்த சில பாதிப்புகள் ஏற்படுகிறது அதற்கு காரணமாக இது அமைந்திருக்கிறது. அதனால் முககவசம் உடுத்தியபடியே  தீவிர உடற்பயிற்சியை செய்ய முடியுமா ? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது ஆரோக்கியமான உடல்வாகுவை கொண்டிருப்பவர்களுக்கு சமீபத்தில்  முககவசம் பாதுகாப்பானது என்பதை ஆய்வு ஒன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட குழுவினர் உடற்பயிற்சி நிலையத்தில்  கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.பின்னர் அவர்களை “முககவசம்” அணிய வைத்தும், அணிய வைக்காமலும் பரிசோதித்து பார்க்கின்றனர். அப்படி உடற்பயிற்சியில்  ஈடுபடும்போது  அவர்களின் சுவாசம், மூச்சை இழுத்து வெளியிடும் கால அளவு, இதயத்தின் செயல்பாடு, உடற்பயிற்சியின் செயல்திறன் ஆகியவை  குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இறுதியில் “முககவசம்” அணிந்தும், அணியாமலும் உடற்பயிற்சி செய்யும்போது சில அளவீடுகள் மாறுபட்டு இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும்  ஏற்படாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் சுவாசத்தின் வழியே கண்ணுக்கு தெரியாத அளவில் நீர்த்துளிகள் வெளியேறுவதுதான் என்பதை நாங்கள் அறிவோம். உடற்பயிற்சி போன்ற உள்ளரங்குகளில் கடினமாக உடற்பயிற்சியில் ஈடுபடும்போது  சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இதனால் தெளிவான முடிவுக்கு வர, 40 வயது நிரம்பிய உடற்பயிற்சி ஆர்வலர்களுடன் சேர்ந்து  செயல்பட்டோம். அவர்களை மூன்றுகட்ட பரிசோதனைகளுக்கு உள்ளாக்கினோம் 

நீல நிறத்தை கொண்ட “சர்ஜிக்கல்” மாஸ்க்கை ஒருமுறை மட்டுமே அணிந்தபடி முதல் சுற்று உடற்பயிற்சியை மேற்கொள்ள வைத்தோம். பின் இரண்டாவது சுற்றில் வடிகட்டும் தன்மை உள்ள  “எப்.எப்.பி.2 ” மாஸ்கை உடுத்தியபடி செயல்பட்டார்கள். உடற்பயிற்சியில் அப்படி முககவசம் அணிந்தபடி  செய்தவர்களின் சுவாசம், இதய துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கலக்கும் ஆக்சிஜன் அளவு போன்றவற்றை கணக்கிட்டோம்.  இதில் இதுகுறித்துச்சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. உதாரணமாக “ஏரோபிக்” உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களை  ஆய்வு செய்தபோது அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி திறனில் 10 சதவீதம் சராசரியாக குறைந்திருந்தது. முககவசம் வழியாக சற்று கடினமாக சுவாசிப்பதற்கு  இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

முககவசம் உடுத்தியபடி உடற்பயிற்சி மேற்கொள்வது  பாதுகாப்பானது, அதனால் எந்த பிரச்சனையும் வராது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். வீட்டு வேலைகள் செய்வது மற்றும்  படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற கடினமாக உடல் உழைப்பு கொண்ட பணியில் ஈடுபடுவது போன்ற மக்கள் அன்றாட நடவடிக்கைகளை தொடரும்போது “முககவசம்” அணிந்தால் பிரச்சனை வருமா? என்பது பற்றி தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top