இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்து வருவது அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது. மேலும், இத்தகைய கொரோனா வைரஸிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி, ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

மக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் , மருத்துவர்கள் அறிவுறுத்துவது , நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துமாறு கூறுகின்றனர். எனவே, மக்கள் கொரோனா வைரஸ் நாவல் தொற்று ஏற்படுவதிலிருந்து தடுக்க சில வழிகள் வீட்டிலேயே இருப்பது, தடுப்பூசி போடுவது மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை இறுக்கமாக வைத்திருத்தல். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எளிதான வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வைட்டமின் D யை எடுத்துக்கொள்ளுங்கள்

மேலும், குழந்தைகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவர்களுக்கு தினசரி 1200 IU வைட்டமின் D வழங்கப்பட்டது. இதில் வைட்டமின் D வழங்கப்படாத குழந்தைகளை விட குளிர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவது கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைவாக இருந்தது. வைட்டமின் டி குழந்தைகளை தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதாக கூறப்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி

பல மருத்துவர்கள் கலந்து கொண்ட டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 46 அதிக எடை கொண்ட ஆண்களும் பெண்களும் ஆறு மாதங்களுக்கு குறைந்த கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டபோது, அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன. மேலும், கலோரிகளை வெறும் 10 சதவிகிதம் குறைப்பதன் மூலம் அதிக எடை கொண்டவர்களுக்கு இது நன்மையளிக்கும். மற்ற ஆய்வுகளும் இதேபோன்ற முடிவுகளைக் கண்டறிந்துள்ளன, அங்கு மக்கள் ஒரு மாதத்தில் 5 கிலோ உடல் எடையை குறைத்துள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






