இதுபோன்ற உடற்பயிற்சி ஆசனத்தை செய்து வந்தால் முதுகுத் தண்டுவடம் நன்றாக வளையும். நுரையீரல், இதயம் போன்ற செரிமான மண்டலம் நன்றாக செயல்பட வைக்கும். முதுகில் உள்ள தண்டு பகுதியை பலப்படுத்தும் ஆசனம் “கட்டிய மகா மேரு வக்ராசனம்” இந்த ஆசனத்தை “டைனமிக்ஸ் ஸ்பைனல் ட்விஸ்ட்” என சொல்கிறார்கள்.

செய்முறை
மிருதுவான போர்வையை எடுத்து இரண்டு கால்களையும் நன்றாக விரித்து அமர வேண்டும். மூச்சை உள்ளுக்கு இழுக்கும் போது இரண்டு கைகளையும் மேலே உயர்த்தியபடி வைக்க வேண்டும். இடது கால் கட்டை விரலை வலது கையால், வலது கால் கட்டை விரலை இடது கையால் மாறி மாறி நன்றாக தொட வேண்டும். இடது கால் கட்டை விரலை, வலது கையால் தொடும் போது இடது கையை நன்றாக நீட்டியபடி வைத்திருக்க வேண்டும்.

இப்பொழுது முகத்தை நன்றாக திருப்பியவாறு விரல்களை பார்க்க வேண்டும். இந்த மாறி யோகாசனத்தை மேற்கொள்ளும்போது இயன்றவரை கைகளை நீட்டினால் போதும். சிரமப்பட கூடாது. நமது உடலைத் திருப்பும் போது மூச்சை வெளியில் விட வேண்டும். பின்னர் இயல்பு நிலைக்கு வரும் போது, மூச்சை உள்ளுக்குள் இழுக்க செய்ய வேண்டும்.

இந்த ஆசனத்தைச் மேற்கொள்வதால் முதுகுத் தண்டு பகுதி நன்றாக வளையும். இதயம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டலம் நன்றாக செயல்பட இந்த ஆசனம் பயன்படும். மேலும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






