12ம் வகுப்பில், கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் தான் பி.இ. பி.டெக் படிக்கும் நிலை இருந்தது. AICTE வெளியிட்ட புதிய அறிக்கையில், இனி 12ம் வகுப்பில் வேளாண்மை மற்றும் வணிகம் படித்த மாணவர்களும் பொறியியல் படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை பொறியியல் படிப்பதற்கு 12ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் கட்டாயமாக பயின்றிருக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இப்போது AICTE ஆனது 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டிற்கான செயல்முறை கையேட்டை வெளியிட்டுள்ளது. இந்த கையேட்டில் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை தகுதியில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
AICTEயின் இந்த அற்புதமான நடவடிக்கையானது பொறியியல் கல்வியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
