காவிரி நதிநீர் பங்கீட்டு வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு

ஒருவழியாக காவிரி நதிநீர் பங்கீட்டு வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. கர்நாடக தேர்தல், ஸ்கீம் என்ற சொல்லிற்கு விளக்கம் போன்ற பல காரங்களை சொல்லி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தது மத்திய அரசு.

Cauvery River and its Dam

தற்போது, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை இன்று தாக்கல் செய்ய கடந்த மே 8ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார். வழக்கு சுமார் பதினோறு மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவிரி நதிநீர் வரைவு திட்டத்தை, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார். மேலும், தீர்ப்பை செயல்படுத்தி நதி நீர் பங்கீட்டை உறுதி செய்ய காவிரி ஆணையம், வாரியம் அல்லது குழு அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் பதில் தர உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Cauvery Dispute & Protest

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போது இது ஆறுதலான ஒரு நகர்வாக இருந்தாலும், மேலும் இவ்வழக்கின் போக்கை பொறுத்தே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான முழு நம்பிக்கையும் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறும்.

scroll to top