தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகாரி முன்பு காதல் ஜோடியை அடித்தும், அரிவாளால் பெண்ணின் கணவரை தாக்கியும் சினிமா பாணியில் பெண் வீட்டார் பெண்ணை இழுத்துச் சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மாதம்பட்டியை அடுத்த குப்பன்னுர் பகுதியைச் சேர்ந்த பகவதி குமார் , ஹரி பிரியா ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ள கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்கள் கொடுத்து அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தது. அனைத்து வேலையும் முடிந்த பிறகு இவர்களை புகைப்படம் எடுக்க பத்திரப் பதிவாளர் மோகன்குமார் அழைத்துள்ளார்.

அப்பொழுது அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பெண் வீட்டார். ஹரி பிரியாவை மட்டும் வெளியில் அழைத்துச் செல்ல பெண்ணின் அண்ணன் மிளகாய் பொடியை பகவதி குமார் முகத்தில் வீசியுள்ளார். ஹரி பிரியாவின் தந்தை ராமமூர்த்தி தான் கொண்டுவந்த அரிவாளால் ஹரி பிரியாவை நோக்கி வெட்டியுள்ளார். பகவதி குமார் கையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்து தாங்கள் வந்த வாகனத்தில் ஹரி பிரியாவை இழுத்து சென்றனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பட்டப்பகலில் அரிவாள் மற்றும் மிளகாய் பொடியுடன் வந்து தாக்குதல் நடந்த நிகழ்வு அங்கிருந்த பத்திர பதிவு எழுத்தர் மற்றும் பதிய வந்த வாடிக்கையாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






