செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதுமான அமரர் ஊர்தி வசதி இல்லை – பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வாகனம் போதிய அளவில் இல்லாததால் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க படுகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் போதுமான அமரர் ஊர்தி வாகன வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல தனியார் அமரர் ஊர்தி வாகனத்தில் எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் செங்கற்பட்டு அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அமரர் ஊர்தி வாகன வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என  பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course