சேலத்தில் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் – வீட்டின் உரிமையாளருக்கு அடி

சேலத்தில் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த உரிமையாளரை தாக்கியதால்,  பொதுமக்கள் அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். சேலம் சுப்ரமணி நகர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் வீட்டின் சமையலறைக்கு செல்வதை கண்ட விஜயன் அவரை தடுக்க முயன்றார். அப்போது குடிபோதையில் இருந்த மர்ம நபர் விஜயனை தாக்கியதுடன், சமையலறையில் இருந்த பாத்திரங்களையும் சூறையாடி உள்ளார்.


இதை தொடர்ந்து விஜயன் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்  பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பதும் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது. 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top