ஈரோடு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் நகைகளை பறித்து சென்றது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் கணவர் இறந்ததால் தனது சகோதரியான ராணியும் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ராணி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது ரத்த வெள்ளத்தில் சகோதரி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், விசாரணையில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட திருடர்கள் மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மூதாட்டியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






