தூத்துக்குடி அருகே குடும்ப தகராறு மற்றும் வரதட்சணை காரணமாக வீடியோ வெளியிட்டு இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த பெண்ணிற்கும், விருதுநகர் மாவட்டம் மணிப்பாறை பட்டியை சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் மனைவியின் சகோதரியை வீரராகவனின் சகோதரருக்கு பெண் கேட்டதாகவும், அதற்கு மனைவி குடும்பத்தினர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண்ணிற்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், கணவருடன் சேர்ந்து அவரது தாய், தந்தை ஆகியோரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்ற அந்த பெண், மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக தனது தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதை செய்தது தான் காரணம் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






