புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் சிலையில் தலையை நேற்று இரவு மர்மநபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். புதுக்கோட்டை விடுதி கிராமத்தில், கடந்த 2003-ம் ஆண்டு பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Broken Periyar Head

Image Courtesy: Puthiyathalaimurai.com

இதனையடுத்து திராவிடர் கழக மண்டல செயலாளர் ராவணன் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த ஆலங்குடி போலீசார் இச்சம்வம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Periyar Statue Broken

Image Courtesy: Puthiyathalaimurai.com

போலீசார் குவிப்பு

மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ், கூடுதல் விசாரனை மேற்கொண்டு வருகிறார். மேலும் உடைக்கப்பட்ட சிலையை இணைக்கும் பணியிலும் அப்பகுதி மக்கள்; ஈடுபட்டு வருகின்றனர். பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

scroll to top