நாளை தபால் வாக்குகள் எண்ணுவதை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது!

நாளை வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகள் ஒரு மேசையில் 500  என்ற எண்ணிக்கையில் அதிகபட்சம் 4 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன. தேர்தல் முடிவுகளில் தபால் வாக்குகள் வெற்றி தோல்விக்கு காரணம் ஆவதால் அவற்றை எப்படி எண்ணுவது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. தபால் வாக்குகளை முதலிலேயே எண்ண வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு ஆனால்  தபால் வாக்குகளை முதலில் எண்ண அவசியமில்லை என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே நாளை தபால் வாக்குகள் எவ்வாறு எண்ணப்பட உள்ளன என்பதை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியதும் தபால் வாக்குகள் பிரிக்கப்படும் மேஜைக்கு 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணிக்கை இடவசதி ஆகியவற்றைப் பொறுத்து எத்தனை மேசை என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார். தபால் ஓட்டுகளை எண்ண தொடங்கியதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் ஓட்டு எண்ணும் மேசை ஒவ்வொன்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் ஒரு மேசையில் ஓட்டு எண்ணும் பணியாளர் இருவர் ஒரு மைக்ரோ பார்வையாளர் இருப்பர்.

அவர்கள் ஓட்டு பதிவு இயந்திரத்தில் இருக்கும் சீலை அகற்றி இயந்திரத்தை இயக்கியதும் ஓட்டு பதிவில் பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கை வரும் அதன் பின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகள் விவரம் தெரியவரும். அந்த எண்ணிக்கையை ஓட்டு எண்ணும் அலுவலர் சத்தமாக தெரிவிப்பதுடன் பதிவான ஓட்டுகளை வேட்பாளர்களின் முகவர்கள் இடம் காண்பிப்பார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course