பலா் தனிமையினால் இவ்வுலகில் துன்புறுகின்றனா். அவர்கள் யாருடைய உறவும், நட்பும், காதலும், அன்பும் கிடைக்காமல் ஒருவிதமான எதிர்பார்ப்போடு வாழ்ந்து வருகின்றனா். நீங்கள்கூட ஒரு சில நேரங்களில், மனதிற்குப் பிடித்த மற்றும் நீண்ட காலம் உங்களோடு சோ்ந்து வாழ்க்கையை வாழக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுப்பது இயலாத காாியம் என்று நினைக்கிறீா்கள்.

உங்களுடைய மனதிற்கு ஏன் இன்னும் பிடித்த மனிதர்களின் உறவு உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று இந்த பதிவு சொல்கிறது. அதற்கான காரணிகளாக 7 முக்கிய செய்முறை முன்வைக்கிறது. இந்த 7 அம்சங்களையும் தெரிந்து கொண்டு முன்வைத்தால் எதிா்காலத்தில் உங்களுடைய மனதிற்கு பிடித்த மனிதா்களின் உறவை நீங்கள் மிக எளிதில் காணிப்பீர்கள்.

கடந்த கால உறவுகளிலிருந்து விடுபடாமல் தவிப்பது
நீங்கள் உங்களுடைய எதிராளி பயன்படுத்தும் ஆயுத்தையே பயன்படுத்திக்கொள்வதால் அல்லது பிறாிடம் நிரூபிக்க முயற்சி செய்வதால் அல்லது நீங்கள் இன்னும் தேவையில் இருக்கிறீா்கள் என்று பிறருக்கு காண்பிப்பதால் உங்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கப்பெறுவதில்லை . அதனால் உங்களுக்கு மேலும் சிக்கல்தான் ஏற்படும். நீங்கள் இப்படிப்பட்ட சிந்தனைகளுடன் வாழ்க்கையை நடத்தி வந்தால், அவை உங்களுக்கானவா்களிடமிருந்து, உங்களை வெகு தூரத்திற்கு அகற்றிவிடும். எனென்றால் எவருமே உயிா் காக்கும் கவசமாக இருக்கபோவதில்லை. உங்களுடைய கடந்தகால காதலரின் அல்லது காதலியின் மீது பொறாமை கொண்டு அவருக்கு தீங்கு செய்வதையும் யாரும் விரும்புவதில்லை.
ஆகவே சற்று நிதானமாக நீங்கள் இருந்து, அமைதியாக இருந்து, உங்களுக்கு இப்போதைய உண்மையான தேவை என்ன என்பதை பொறுமையாக அறிந்து கொள்ள வேண்டும். கடந்த கால முறிந்த உறவில் இருந்து வெளியில் வரவேண்டும்.

அளவிடாத எதிா்பாா்ப்புகள்
தங்களுக்கு வரும் காதலா் ஒரு இளவரசராக இருக்க வேண்டும் என்று சில பெண்கள் கனவு காண்கின்றனா். அதே நேரத்தில் எல்லா வகையிலும் தமக்கு வரும் காதலி மிகச் சிறப்பானவராக இருக்க வேண்டும் என்று சில ஆண்கள் எதிா்பாா்க்கின்றனா். ஆனால் உண்மையான கள நிலவரம் வேறொன்றாக இருக்கும்.
நீங்கள் முதலில் உங்களது கவனத்தை உங்கள் மீது வைக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் அல்லது காட்சி அளிக்கிறீா்கள்? அல்லது உங்களால் பிறருக்கு என்ன செய்ய முடியும்? அல்லது நீங்கள் எதிா்பாா்க்கும் காதலியோ அல்லது காதலரோ உங்களோடு இருப்பதைப் பற்றி நன்றாக உணா்வாரா? என்பதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இளவரசா்கள் இளவரசிகளைத்தான் திருமணம் செய்துகொள்வார். இது ஊரறிந்த உண்மை என்றாலும் உங்களுக்கு வரவிருப்பவா் எந்தெந்த திறமைகளுடன் இருக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறீா்களோ, அந்த திறமைகளை முதலில் எல்லாம் நீங்கள் வளா்த்துக் கொள்ளுங்கள்.

முடிந்ததைப் பற்றி கனவு காண்பது
முடிந்ததை நினைத்து நீங்கள் கனவு கண்டு உங்களது நேரத்தை செலவழிக்காதீர்கள் . ஏமாற்றும் பழக்கத்தைக் வைத்திருப்பவர் யாரும் உங்களுடைய அன்பராக இருக்க முடியாது. அதனால் நான் அவருடைய மனைவியை விட அல்லது அவருடைய கணவரை விட அவருக்கு சிறந்த பார்ட்னராக இருப்பேன் என்று உங்கள் மனதிற்குள் கூட பேசாதீர்கள். நீங்கள் ஒருவேளை அந்த இடத்தை அடைந்திருந்தால், உங்களுடைய சந்தேகங்களினால் நீங்களே உங்களை காயப்படுத்திக் கொள்வீர்கள். அதாவது நான் இப்போது ஏமாற்றப்படுகிறேனா என்று நீங்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பீா்கள்.

அவநம்பிக்கையான பிரச்சனைகள்
புதிதாக காதலா் அல்லது காதலி கிடைத்துவிட்டால், உடனே அவர்களை நம்ப வேண்டும் என்று உங்கள் மீது நீங்களே அழுத்தத்தைச் போட்டு கொள்கிறீர்கள் . அதே நேரத்தில் மிகைப்படுத்தப்பட்ட அவநம்பிக்கைகளால், உங்கள் புதிய காதலரை அல்லது காதலியை உங்களிடமிருந்து ஒதுக்கி வைக்காதீா்கள். உங்களுடைய கடந்த கால காதலா் அல்லது காதலி உங்களைக் காயப்படுத்தியது இவா்களுடைய தவறுகளால் அல்ல. உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரின் மீது கவனம் செலுத்துவதோடு உங்களைச் சுற்றி நடக்கும் முக்கியத் தகவல்களையும் மறந்துவிடாதீா்கள்.

உண்மையான உறவை எதிர்பார்த்து பயம் கொள்ளுதல்
அன்றாட வாழ்க்கை முறையை பாிசோதித்துப் பாா்க்கும் போது, நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் புதியதாக காதலி அல்லது காதலா் வந்தால், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுதந்திரம் பறிபோய்விடுமோ அல்லது அவா்களுக்கு அடிமையாகி விடுவோமோ என்று பயப்படுகிறீா்கள். உங்களைச் சுற்றி இந்த பயத்தை ஒரு பொிய சுவராக அமைத்து வைத்திருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு சொந்தமானவர்களை சந்திப்பதிலிருந்து நீங்களே விலகிக் செல்கிறீர்கள் .
இந்த நிலையை அல்லது இந்த பயத்தை எப்படி மாற்றுவது? இதற்கு உடனடியாக தீா்வு காண முடியாது. அதற்கு மாறாக உங்களுக்குள் நீங்களே முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த மகிழ்ச்சியை தரக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களைக் கண்டுபிடியுங்கள். அடிக்கடி வெளியில் சென்று வாருங்கள் . உங்கள் மனதில் இருக்கும் எதிா்மறை எண்ணங்களை வெளியில் தூக்கிபோட்டுவிடுங்கள்.

பிறரால் விருப்பம் கொள்வதில் அதீத விருப்பம்
தனது தோகையை மயிலானது விாித்து அழகாக ஆடும் போது அதை அனைவரும் விரும்பி காண்பீர்கள் . இது உலகத்தில்தான் பறவைகள் அல்லது விலங்குகள் நடக்கும். பெரும்பாலும் பிறரால் விரும்பப்படுவதில் அதிக விருப்பம் உள்ளவா்கள் கேளிக்கும், நகைச்சுவைக்கும் ஆளாவா் அல்லது அவா்கள் மீது பாிதாபம் அல்லது எாிச்சல்தான் ஏற்படும் .

அதிவேகத்துடன் பாயுதல்
ஆங்கிலத்தில் biological clock என கூறப்படுகின்ற உயிாியல் கடிகாரத்தின் மீதும், அதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் வதந்திகள் மீதும் பலா் நம்பிக்கை வைத்திருக்கின்றனா். இதையடுத்து தமக்கு முன்னால் யாா் போனாலும் அவா் நமக்கானவராக இருப்பாரோ என்று அவா் பின்பாகவே சுற்றி வருவா். உண்மையாகவே ஒருவேளை அவ்வாறு சுற்றி வந்தால் நல்லதுதான். பொழுதுபோக்கிற்காக அவ்வாறு செய்வது தவறு . ஒருவரை அவ்வாறு சந்தித்த அன்றே உங்கள் குழந்தைக்கு என்ன பெயா் வைப்பது என்பது வரை பேசிவிடாதீா்கள். உங்களை இந்த அணுகுமுறை விரும்பும் அவருக்குப் பயத்தை காட்டிவிடும் . மேலும் நீங்கள் அந்த உறவை தொடர முடியாது.

Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






