நம் வாழ்வில் இலக்குகளை அடைவது எளிதா?

Success

இலக்குகள் தான் நம் உயர்வுக்கான படிக்கட்டு. சின்ன சின்ன இலக்குகளை அடைந்த மகிழ்ச்சி தான், உயர்ந்த லட்சியங்களை இலக்காக குறிவைத்து அதனை அடைதல் எளிதாகிறது. பெரும்பாலானோருக்கு தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் கானல் நீராகும் போது, சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்து விட முடிகிறது?

இலக்குகளை வரையறு

இலக்குகளை நிர்ணயிக்கவும், அவற்றை நோக்கி பயணிக்க எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும், ஒரு தெளிவான வரையறை வேண்டும்.

எந்த அளவுக்கு உங்களால் முடியுமோ அந்த அளவுக்கு தெளிவாகவும், விரிவாகவும் உங்கள் இலக்குகளை நீங்கள் வரையறுக்க வேண்டும். உதாரணமாக மருத்துவம் படிக்க வேண்டும் எனில், ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் பதினோராம் வகுப்பில் உயிரியல் பாடத்தை தேர்வு செய்து பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று, அதற்கான நுழைவு தேர்வு எழுதி, பிறகு தான் மருத்துவம் படிக்க முடியும். இதில் தான் எத்தனை சிறிய இலக்குகள், அது ஒவ்வொன்றையும் அடைந்த பிறகு தான் தனது முன்னேற்றத்தை நோக்கி செல்ல முடியும்.

இலக்கில்லா மனிதனின் சக்தி, தெளிவில்லாத நீரோடையைப் போல பெருமளவு வீணாகின்றது.

கால அளவு

வெற்றியடைய ஒரு சுலபமான வழி உள்ளது. அடுத்த வரும் ஆண்டுக்கு பத்து இலக்குகளை நிர்ணயிங்கள். அவற்றை

* அன்றாடம் முடிக்க வேண்டிய இலக்குகள்

Exercise

எ.கா : தினசரி உடற்பயிற்சி

* மாதத்திற்குரிய இலக்குகள்
எ.கா : எடைக்குறைப்பு, தோட்டப் பராமரிப்பு, பரிட்சை தயாரிப்பு

* ஆறு மாதத்திற்குரிய இலக்குகள்

எ.கா : பணம் சேமிப்பு

* வருடத்திற்குரிய இலக்குகள் என பிரித்துக் கொள்ளுங்கள். அவற்றை அடைய எல்லாவிதமான முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வாருங்கள். அந்த வருடத்தின் இறுதியில் நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டால் நீங்களே வியந்து போவீர்கள்.

தடங்கல்கள்

தடைகள் நம் மன உறுதியை குலைக்கும். தடைகளைக் கண்டு தளர வேண்டாம். தடைகள் யாவும் நாம் தகர்த்தெறிவதற்காகவே தோன்றுவன. வெளியிலிருந்து வரும் தடைகளை விட நம் மனத்தடைகள் தாம் நம்மை மனம் தளரச்செய்யும். மனத்தடைகளை வென்று விட்டால் அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும்.

எதுவுமே வாழ்வில் கடினமல்ல. எதையும் கற்று கொள்ளலாம். அதற்கு வயது தடையன்று
எதற்கும் காலம் கடந்து விடவில்லை. இன்றைக்கு பெரும் சாதனையாக கருதப்படும் திறன்கள் நாளை நம் வசப்பட்டதும் எளியதாகி விடும்.

இலக்குகளை கனவு காணுங்கள்!

Goal Dream

* இலக்குகளை காகிதத்தில் எழுதுங்கள்.

* பின் காலக்கெடுவை நிர்ணயிங்கள்.

* தினசரி அதனை மனதில் உச்சரியுங்கள்.

* அதற்கான வழிமுறைகளை தேடுங்கள்.

* பின் அதனை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.

* நாம் பட்டியலிட்ட வழிமுறைகளை ஒழுங்கு படுத்த வேண்டும்.

* எந்த வரிசைக்கிரமத்தின் படி செய்ய வேண்டும்.

* எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெளிவாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். சரியான திட்டமிடல் அந்த வேலையை ஐம்பது சதவீதம் முடித்ததற்கு சமம்.

“வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு”,
வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் குரல் ஒலிக்கும் திருக்குறள் படி உங்கள் எண்ணம் போலத்தான் வாழ்வு!

இலக்கினை அடைய வாழ்த்துக்கள்!


When our goal has a high priority in our life, we pay attention and put enough effort to achieve it. Goal remains a dream unless it is in your mind. Goal should be a determined one, time-specific, measurable, etc. For example, doing workout can be daily goal, exam preparation can be a goal to achieve in a month,etc. It is simple to achieve goals in life by following the above steps.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course