முக்கிய சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா?

மத்திய அரசின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் நாளை முதல் தடை விதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன.

 இதையடுத்து ஓடிடி  தளங்கள் உட்பட அனைத்து சமூகதளங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதனை அமல்படுத்த பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகரம்  உள்ளிட்ட நிறுவனங்கள் ஆறு மாதம் அவகாசம் கேட்டு இருந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகங்களிலிருந்து இன்னும் எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து சமூக ஊடங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும்  எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top