மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் S.சதாசிவம் மேச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

 

மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் S.சதாசிவம் மேச்சேரி ஒன்றியத்தில் தனது தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் மக்களிடம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் – நம்மில் ஒருவர் அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கவும் என்று பிரச்சாரம் செய்தனர் .

 

தமிழக முதலமைச்சர் எடப்பாடிK.பழனிச்சாமி ஆட்சியில் செய்த சாதனைகள் 

* அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க செய்தது.

* கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி.

* விவசாய கடன் தள்ளுபடி.

* காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் நிரப்பி விவசாயத்தை செழிக்க செய்தது.

* கொரோனா காலத்தில் மக்களுக்கான பொருளாதாரம் & மருத்துவ உதவிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

* மகளிருக்கு இருசக்கர வாகனத்திற்கு ரூ.25000/- வழங்கியது.

* மேட்டூர், சேலம் மருத்துவமனை மற்றும் சேலம் மேம்பாலம் மூலம் உட்கட்டமைப்பை வளர்ச்சியடைய செய்தது.

 

                 

மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் S.சதாசிவம் அவரின்தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

மேட்டூர் சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் 

* மேட்டூர் அணை பூங்காவை முதன்மை சுற்றுலா தளமாக மாற்றுதல் ( Rope car,boating ).

* கொளத்தூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைத்தல் (சிப்காட்) & தோனி மடுவு திட்டம் செயல்படுதல்.

* காவிரி உபரி நீர் திட்டத்தை அனைத்து மோகனூர் & மேச்சேரி ஒன்றியத்தின் எரிகளுக்கும் நிரப்புதல்.

* மேட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியை மிக சிறந்த பள்ளியாக தரம் உயர்த்துதல் ( Model School ).

*மேட்டூரில் Polytechnic,Nursing & Fishering Department கல்லூரிகளை உறுதியாக கொண்டு வருதல்.

                    மேச்சேரி ஒன்றியம் மேம்பட நமது வாக்குறுதி 

* மேச்சேரியை தலைமையிடமாக கொண்ட தாலுகாவை உறுதியாக கொண்டு வருவேன்.

* மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துவேன்.

* மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சுத்தமான குடிநீர் வசதி வழங்குவேன்.

* உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வழிவகை செய்வேன்.

* அனைத்து கிராமங்களுக்கும் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும்.

* நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைப்பேன் ( கைத்தறி,விசைத்தறி ).

* பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைப்பேன்.

* அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் பயன்பெறும் வகையில் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கம் அமைத்து தரப்படும்.

* ஏழை, எளிய பாமர மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கிடைத்திட வழிவகை செய்வேன்.

* மதிப்பு கூட்டுப்பொருட்கள் பால் மற்றும் இதர விவசாய விளை பொருட்களை அதிக உற்பத்தி ஏற்படுத்த நவீன மயமாக்குவேன்.

* மேச்சேரி பகுதியில் விளையாட்டு மைதானம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தருவேன்.

* அனைத்து பகுதிகளுக்கும் தார் சாலை & பொது கழிப்பிடம் அமைக்கப்படும்.

* முதியோர், விதவைகள், ஊனமுற்றோர்களுக்கான ஊக்கத்தொகை அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்வேன்.

* மீன் வளர்ப்பு தொழிலை நவீனமயமாக்குதல் ஆராய்ச்சி தொழில் நுட்பக்கல்லூரி  மற்றும் அரசாங்க நேரடி குளிரூட்டப்பட்ட விற்பனை கூடம் இலவசமாக அமைத்து தருவேன்.     

 

scroll to top