இன்றைய ராசிபலன் 29-03-2021

மேஷம்:

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

ரிஷபம்:

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மிதுனம்:

எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கடகம்:

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரங்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

சிம்மம்:

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்ப நிலையை மாறி மகிழ்ச்சி அதிகரிக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள் உடனே உணர்ச்சி வசப்பட்டு கருதாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

துலாம்:

உணர்ச்சி வேகத்தில் அவசர பட வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து  கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்:

ராஜதந்திரமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை ஆபரணம் வந்து சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். இனிமையான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:

நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:

கடந்த இரண்டு நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில்  நிம்மதி உண்டு. அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல்நலம் பாதிக்கும். கொஞ்சம் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:

உங்கள் அறிவு ஆற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course