இன்றைய ராசிபலன் 27-03-2021

மேஷம்:

 குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டாகும். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்:

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்து பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்..

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கடகம்:

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

சிம்மம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். பணம் நகையை கவனமாககையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் ;அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கன்னி:

குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

துலாம்:

குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவது நல்லது. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகள் நட்புணர்வு தற்போது கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

விருச்சிகம்:

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். நன்மை நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு:

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மன நிறைவு கிட்டும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களிடம் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்: 1, 5

கும்பம்:

சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார்ஆதரித்து பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்; அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்:

எதிர்பாராத தனலாபம் உண்டு. உறவினர் நண்பர்களினாள் ஆதாயம் அடைவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயர் சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றி பெறும் நாள்

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course