தினசரி வாழ்க்கையில் இளைஞர்கள் காலையில் செய்யும் உடற்பயிற்சி என்னவென்று தெரிஞ்சிக்கணுமா? 

காலையில்  உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளை தருகிறது, இதனால் தினசரி வாழ்க்கையில்  எந்த மாதிரியான மாற்றம் நாம் அடைவோம் என்பது குறித்துப் பார்ப்போம்.

இளைஞர்கள்  தினந்தோறும் காலையில் செய்யும் உடற்பயிற்சி 

இன்றைய பரபரப்பான இவ்வுலகில்  நாம் உடல் நலனுக்கு தேவையான பல விஷயங்களைத் தவறவிடுவது சகஜமாகிவிட்டது. நேரத்திற்கு சாப்பிடாமல், தூங்காமல் எப்போதும் வேலை வேலை என  வேலையில் மூழ்கிக்கிடப்பவர்கள் ஏராளம், தவறவிடும் மிகவும் முக்கியமான விஷயம் காலை உடற்பயிற்சி.  காலை தூக்கத்துக்கும் “உடற்பயிற்சி” ஆர்வத்துக்கும் நடக்கும் போரில்  பெரும்பாலும் சிலபேருக்கு காலை தூக்கமே வெற்றி பெறுகிறது. இதனால்,உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் பல நாட்கள்  மக்கள் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

காலை உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமானது , உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளை செய்கிறது, அதனால் தினசரி வாழ்க்கையில்  எவ்வாறு மாற்றம் நாம் அடைவோம் என்பது குறித்துப் பார்ப்போம்.

நாம் காலையில் செய்யும் உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு மற்றும் மூளையின் நியூரான்களுக்கும் சக்தியை அளித்து நினைவுத்திறன் மேம்படுத்துகிறது. நினைவுத்திறன் குறைபாட்டால் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காலையில் செய்யும் முறையான உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறைக்கப்படும். 

காலை உடற்பயிற்சி மனஅழுத்த  நோயிலிருந்து விடுபட  சிறந்த தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சியில், நடைப்பயிற்சி செய்தல், சைக்கிள் ஓட்டுதல், ஆகியவற்றால் மூளையில் உள்ள புத்துணர்ச்சியை தூண்டி மகிழ்ச்சியை தரும் பின் “ஹார்மோன்களான” செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்பின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன்கோபம், படபடப்பு போன்றவற்றை நம்மிடமிருந்து தள்ளிவைக்க உதவுகிறது.  

நம் வாழ்நாளை உடற்பயிற்சி  அதிகரிக்க கூடியதாகும் உடல் முதுமையடைந்து தோல் சுருக்கம் விழுவதை தாமதப்படுத்துகிறது. நமக்கு வயதாவதால் செல்களின் செயல் திறன் குறைந்து, அவை இரண்டாக பிரியத்தொடங்குகின்றன. இதனைத்தொடர்ந்து, தோல் செல்களின் மையப் பகுதியான நியூக்ளியஸில் உள்ள குரோமோசோம்களின் அளவு சிறிதாகும். இதனால், நம் தோலில் சுருக்கம் விழும். உடற்பயிற்சி பல வருடங்கள் செய்வதால், இந்த குரோமோசோம்களின் நீளம் குறையத் தாமதமாகிறது என்பதும், இதனால் தோலில் சுருக்கம் விழுவதும் தாமதமாகிறது என்பதும் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரித்து வருகிறது, இதனால் இரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. உடற்பயிற்சி தினந்தோறும் செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து, மேலும் வெளியேற விடாமல் தடுக்கப்படுகிறது. எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக இருப்பதால், மண் மற்றும் தூசி மூலம் பரவும் நோய் தொற்று தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியை மேற்கொள்வதால் புதிய நுண்ணிய ரத்த நாளங்கள் உருவாகும்.

 

உடற்பயிற்சிகள் கடுமையாக மேற்கொள்ளும்போது உடல் தசைகள் அதிக சூட்டை வெளியேற்றுகின்றன.  தசைகளில் இருந்து இந்த வெப்பம் ரத்தம் மூலம் தோலுக்கு மாற்றப்படுகிறது. தோலில் இருக்கும் வியர்வை வெளியேற்றும் துளைகள் மூலமாக வெப்பம் வெளியேறி, காற்றில் கலக்கிறது. இதையடுத்து  பித்த அளவு சமமாகி உடல் குளிர்ச்சி ஆகிறது. 

உடற்பயிற்சியில் முதன்முறையாக  ஈடுபடுபவர்கள் கடினமாக உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகள் செய்ய தேவை இல்லை. ரத்தத்தில் சர்க்கரை அளவு 10 நிமிட வார்ம் அப் பயிற்சி மூலமாகவே  கணிசமாக குறைகிறது. இதனால் இதய ரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது . எனவே, குறைந்தது 10- 50 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு  உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.


தீவிர சிகிச்சை நோய்களுக்கு ஆளானவர்கள்  70 வயதைத் தாண்டியவர்கள், உடற் பயிற்சியில்  ஈடுபடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் மருத்துவ உலகில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கலிபோர்னியாவில் உள்ள, “கெய்சர் பெர்மனெண்ட் போண்டனா” ,மருத்துவமனையை சேர்ந்த மருத்துவக் குழுவினரால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையின் படி இதய செயலிழப்பு, டைப் 2- சர்க்கரை, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கூட மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம் இதன் மூலமாக நோயின் தாக்கம் குறையும் எனபது அறிவித்திருக்கிறார்கள். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top