வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் கடுப்பு பிரச்சனைக்கான தீர்வுகள்..

கோடை வெயிலால் நம் உடலில் ஏற்படும் சிறுநீர் கடுப்பு, தொற்று நோய்கள் என நம்மை பாடாய்படுத்தும் காலம் ஆரம்பமாகிறது. வெயிலில் சிறிது நேரம் சென்றால் போதும் உடல் மிகவும் சோர்ந்து விடும். அன்றாடம் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

நிறைய நீர் பருகுங்கள்:
தண்ணீர் மற்றும் மோர், பழைய சாதம் கரைத்த கஞ்சி, இளநீர், பதநீர் போன்றவற்றை குடிப்பது நல்லது. சிறுநீர் கடுப்பு இருப்பவர்கள் உடனடியாக சரியாக சின்ன வெங்காயம் ஒன்றை நன்றாக மென்று சாப்பிடுங்கள் பின் ஒரு கப் நீர் குடியுங்கள். சிறுநீர் கடுப்பு உடனடியாக நின்று விடும்.

அடுத்து ஒரு கப் நீரில் ஒரு கரண்டி தயிர் சின்ன வெங்காய சாறு ஒரு கரண்டி உப்பு சிறிதளவு விட்டு மிக்ஸ் செய்து குடிக்கலாம். மிதமான சுடு நீரில் சர்க்கரை மூன்று பங்கு உப்பு ஒரு பங்கு  சேர்த்து மிக்ஸ் செய்து குடிக்க உடனடியாக சரியாகும்.



வெட்டி வேர் நீர், நன்னாரி சர்பத் , தர்பூசணி , எலுமிச்சை ஜீஸ் என தினசரி ஒரு பழச்சாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
தக்காளி துண்டுகளில் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

ஸ்பிரே பாட்டிலில் ரோஸ் வாட்டர், தண்ணீர் இரண்டையும் சேர்த்து கொள்ளவும். வெயிலின் தாக்கம் போது முகத்தில் ஸ்பிரே செய்யவும்.

வெள்ளரிக்காய் சாலட் மற்றும் ஜீஸ் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளித்த பின் நீரில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பிறப்புறுப்பு பகுதியை கழுவி விடுங்கள். அப்படி செய்தால்  உங்களுக்கு சிறுநீர் தொற்று வராது.  

 

scroll to top