நம்மில் பலர் பள்ளி பருவகாலங்களிருந்து இலந்தை பழத்தை சாப்பிடாமல் இருந்திருக்க முடியாது. அத்தகைய இலந்தை பழம் மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. இலந்தை பழம் உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் இலந்தை பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இலந்தை பழத்தில் 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.

இலந்தை பழத்தின் மருத்துவ பயன்கள்:
ஞாபகசக்திக்கு உதவும்:
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். எனவே மாணவர்கள் இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நினைவாற்றலை அதிகரிக்கும். இரத்தக் காயம் பட்ட இடத்தில் இலந்தை பழத்தின் இலைகளை நன்றாக அரைத்து காயத்தின் மீது கட்டினால் விரைவில் ஆறிவிடும்.

உடல் சூட்டினால் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்கவும் இலந்தை பழம் பெரிதும் பயன்படுகிறது. மருத்துவ ஆய்வுகளில் இலந்தை பழம் உடலில் பித்தம் அதிகரித்தல் , தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பித்தத்தினால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நன்மை தரும்.
எலும்புகள் வலிமை பெறும்:

ஞாபக திறனை அதிகரிக்க இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். இலந்தை பழங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்பு குறைபாடு உள்ள குழந்தைகள், வயதானவர்கள் இலந்தை பழங்களை தினமும் சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
தலைசுற்றலை கட்டுப்படுத்துகிறது:

பெண்களுக்கு மாதவிலக்கின் பொது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த இலந்தை பழம் பயன்படுகிறது. இலந்தை பழம் பசியின்மையை போக்கி பசியை தூண்ட பயன்படுகிறது. இலந்தை பழம் பித்தம், வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்:

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக இலந்தை பலம் இருக்கிறது . இரவில் தூங்கும் போது இலந்தை பழத்தை சாப்பிட்டால் உடல் வலியை நீங்க செய்து நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






