உங்கள் வயிற்றில் கொழுப்பும் சதையுமாக இருக்கிறதா? கவலைவேண்டாம் இந்த ஆசனத்தை செய்து  தீர்வை பெறுங்கள்!

சேது என்றால் பாலம் என்றும் பந்தம் என்றால் கட்டுதல் அல்லது நிறுத்துதல் என்றும் பொருள். இந்த ஆசனம் பார்ப்பதற்கு பாலத்தைப் போன்று தோன்றுவதால் “சேது பத்தாசனம்” என்று பெயர் பெற்றது. முதலில் போர்வையை தரையில் விரித்து மல்லாந்து படுத்தபடி இரண்டு கால்களையும் மடித்து புட்டத்துக்கு அருகில் வைக்கவும். கால் மூட்டுகள் வானத்தை பார்த்தது போல் இருக்க வேண்டும்.

பின்பு வலது கையால் வலது கணுக்காலையம், இடது கையால் இடது கணுக்காலையம் பிடித்துக் கொண்டு, இரு தோள்களுக்கு இடையே  எவ்வளவு தூரம் இருக்கிறதோ அதே அளவு தூரம் கால் பாதங்களுக்கு இடையேயும் இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் இருந்து கொண்டு மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்துக் கொண்டு இடுப்பு மற்றும் முதுகை தரையில் இருந்து மேலே தூக்கவும்.

ஆனால்  பாதங்கள், கைகள், கழுத்து, தலையின் பின் பகுதி போன்றவை தரையிலேயே பதித்தபடி இருக்க வேண்டும். இந்நிலையில் சாதாரணமான சுவாசத்தில் ஒரு நிமிடம் வரை இருந்து பின்பு மூச்சை வெளி விட்டுக் கொண்டே இடுப்பு மற்றும் முதுகை தரையில் இறக்கி கொள்ளவும். கைகளின் பிடியைத் தளர்த்திக்  கொண்டு இரு கால்களையும் நீட்டவும். இதனை மூன்று முறை செய்ய வேண்டும். 

சேது பத்தாசனத்தின் பயன்கள்:

இந்த ஆசனமானது உணவு செரிமானத்தை சீராக்குகிறது மற்றும்  மலச்சிக்கலை போக்குகிறது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. கழுத்துப் பாகங்களில் உள்ள எலும்பை உறுதி செய்து கழுத்தைப் பலப்படுத்துகிறது. முகத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முகப் பொலிவு பெறச் செய்கிறது.

வயிற்றில் கொழுப்பு அதிகரிக்காமல் இருப்பதற்கு இந்த “ஆசனம்” உதவியாக இருக்கிறது. ஆரோக்கியத்துடன் முதுகு தண்டை வைப்பதற்கு இது சிறந்த ஆசனம் ஆகும். இடுப்புப் பகுதி தசைகளை  வன்மையடையச் செய்யும் மற்றும் கல்லீரல்,மண்ணீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நல்ல நிலையில் இயங்க வைக்கிறது. காலின் சதையை  வலுவாக்குகிறது. இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க  பயன்படுகிறது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top