குடல் பிரச்சினைகளை ஆற்றும் மூலிகைகள்:
பெருஞ்சீரகம் விதைகள்:
இதனை சாப்பிடும் போது வாயில் புத்துணர்ச்சி உண்டாகி சிறப்பாக செயல்படுகிறது. இது உணவுக்குப் பிறகு உண்ணப்படுவது சிறந்தது
சீரகம், ஏலக்காய், ஓமம் விதைகள் ஊற வைத்த தண்ணீர்:
வீக்கம், இரைப்பை பிரச்சனை மற்றும் அஜீரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்தது. 1 டீஸ்பூன் ஓமம் விதைகளை கருப்பு உப்புடன் சேர்த்து வெதுவெதுப்பான நீரில் உணவுக்கு பிறகு சாப்பிடுவதால் வயிற்று வலி (வாயு காரணமாக) உடனடியாக நீங்கும்.
பெருங்காயம்:
பெருங்காயம் ஆரம்பத்தில் வாயுவை விடுவிக்கிறது. சரியான செரிமானத்திற்காக காய்கறிகளை சமைக்கும் போது ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடி சேர்ப்பது எப்போதும் நல்லது. குழந்தைகளின் வாயு மற்றும் வீக்கத்தை போக்க தொப்புளைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் அடிவயிற்றில் பெருங்காய பேஸ்டையும் பயன்படுத்தலாம்.
உணவே மருந்து, சமையலறையே நம் மருந்தகம். அதிலிருந்து சிறந்ததை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.
