இன்ப அதிர்ச்சி: கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரை – மருத்துவ பரிசோதனையில் ஒரு அதிர்ச்சி தகவல்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பேவிபிராவிர் (Favipiravir) மாத்திரைகள் நல்ல பலனைத் தருவது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதுவரை, கொரோனா தோற்று நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தான் பல நாடுகள் இறங்கியுள்ளன.

தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் உள்ள நிலையில், பிற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற மருந்துகள் சோதனை ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tablet for Corona Virus

அந்த வகையில் ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகள் தரப்படுகின்றன. இந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் சோதனை முறையில் மருத்துவர்கள் தந்துவருகின்றனர்.

கிளென்மார்க் என்ற நிறுவனம் தான் இந்த மாத்திரைகளை தயாரித்து விற்பனை செய்கிறது. பேவிபிராவிர் மாத்திரைகள் எந்தளவுக்கு பலன் அளிக்கின்றன என்பது தொடர்பாக இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் பரிசோதனைகளை செய்தது இந்த நிறுவனம். இதன் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையை கிளென்மார்க் நிறுவனத்தார் நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

பேவிபிராவிர் மாத்திரைகள், லேசான பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு வரை உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதாக தெரிய வந்திருக்கிறது என கிளென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது..

பேவிபிராவிர் மாத்திரையை, 150 நோயாளிகளுக்கு தந்து, இந்த மாத்திரையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ பரிசோதனையின்போது, கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு, வழக்கமான ஆதரவு பராமரிப்புடன் 14 நாட்கள் வரையில் பேவிபிராவிர் மாத்திரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்றாம் கட்ட சோதனையில் முதன்மை செயல்திறன் முடிவு, மேம்பாடுகளை காட்டி இருக்கிறது. மேலும் பேவிபிராவிர் மாத்திரைகள் எந்தவொரு மோசமான பாதகமான விளைவுகளையோ, மரணத்தையோ ஏற்படுத்தவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் பொதுவாக நிகழ்ந்துள்ள பாதிப்பை கணக்கிலெடுக்கும்போது, 12 நோயாளிகளுக்கு யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கிறது. இரைப்பை குடல் தொந்தரவும் லேசான அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விக்குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் ஜாரிர் உட்வாடியா கருத்து தெரிவிக்கையில், “இந்திய பேவிபிராவிர் மாத்திரைகள் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. தொற்று நோயின் பரவலை கருத்தில் கொண்டு, அவசர உணர்வோடு இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அறிவியல் கொள்கைகளில் சமரசம் செய்யப்படவில்லை. ஆரம்ப முடிவுகளை சுதந்திரமாக காண ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவை ஊக்கம் அளிக்கின்றன. இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் விரைவான நிவாரணம் பெற்றனர். வைரஸ்கள் வேகமாக ஒழித்துக்கட்டப்பட்டன. இதன் இறுதிக்கட்ட முடிவுக்காகவும், உலகளவில் நடக்கிற ஆய்வு முடிவுக்காகவும் காத்திருக்கிறேன். அதுவரையில், கொரோனா நோயாளிகளுக்கு பேவிபிராவிரை பயன்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கருதுகிறேன்” என குறிப்பிட்டார்.

கிளென்மார்க் நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் மோனிகா தாண்டன் கூறுகையில், “பேவிபிராவிர் மாத்திரைகள் பற்றிய மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் ஊக்கம் அளிக்கின்றன. இவை, லேசானது முதல் மிதமானதுவரையில் பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்ப காலத்தில் இந்த மருந்து தருகிறபோது, நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை தரலாம் என காட்டுகின்றன. நோயாளிகளின் இறப்பையும் தடுக்கலாம்” என தெரிவித்தார்.

இந்த பரிசோதனையின் முடிவு, கொரோன பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பெரும் நிம்மதியை தரும் என எதிர்பார்க்கலாம். அதோடு, இதுவரை கொரோன தடுப்பு மருதிற்கான ஆய்வுகள்தான் உலகம்தோறும் பெரும்பாலாக நடந்துகொண்டிருக்கிறன்றன. ஆனால், ஏற்கனவே கொரோனா வந்தர்வர்கள் அந்த பாதிப்பில் இருந்து குணமடைய இந்த பேவிபிராவிர் மருந்து பெரும் வரவேற்பை பெறக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com