காதலில் இருவரும் காதலை விட பணம்தான் முக்கியம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா?

நீங்கள் பணக்காரராகவோ அல்லது நன்றாக சம்பாதிப்பவராகவோ இருந்தால் உங்களின் பணத்துக்காக பலர் உங்களிடம் நெருங்கி பழகலாம். நயவஞ்சகமாக  அவர்களின் தேவைக்காக உங்களின் பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.  உங்களை அந்த வழியில் காதலிப்பவர்கள் கூட உங்களின் பணத்துக்காக உங்களை காதலிப்பது போல நடிக்கலாம். நீங்கள்  உங்களுடன் பழகுபவர் உங்களின் பணத்துக்காகத்தான் உங்களுடன் பழகுகிறார்கள் என்பதை நாளடைவில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அது தெரிஞ்சிக்க மிகவும் தாமதமாக இருக்கும்.

எனவே அதனை முன்கூட்டியே தெரிந்து கொள்வது  தக்க சமயத்தில் உங்களை காப்பாற்றும். உங்கள் பார்ட்னர் நடந்து கொள்ளும் விதமே உங்களிடம் அவர்கள் பணத்திற்காகத்தான் பழகுகிறார்களா என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடும். அதனால் அதை கண்டுபிடிக்க  என்னென்ன அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளாலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆரம்பத்தில் மட்டும் பணம் கொடுப்பது 


உங்கள் பார்ட்னர்  நல்லவர் போல நடிப்பதன் மூலம்  உங்களை ஆரம்ப கட்டத்திலேயே கவர முயற்சி செய்யலாம். ஹோட்டல், உணவு பில்கள் மற்றும் பரிசுகள் போன்றவற்றிற்கு அவர்களே பணம் கொடுக்க விரும்புவார்கள்.  உங்கள் நம்பிக்கையை அவர்கள் பெற்ற பிறகு, அவர்கள் விஷயங்களுக்கு பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பயணங்கள், உணவு அல்லது ஆபரணங்களுக்கு பணம் செலுத்தத் தொடங்க உங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்வார்கள். 

நிதி பிரச்சினைகளை பேசுவது பற்றி எப்போதும் ஆரம்பிப்பார்கள் 

நிதி பிரச்சினைகளை பேசுவது மிகவும் நேர்மையானதாக இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி அதிகமாக பேசுவது நல்லதல்ல. உங்கள் பார்ட்னர் அவர்கள் எவ்வளவு மோசமாக கடனை வைத்திருக்கிறார்கள் அல்லது பணத்தை இழக்கிறார்கள் என்பது பற்றிய குறிப்புகளை  வழங்க உங்களிடம்  முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதைப்பற்றி  பல முறை சொல்வதற்கு முயற்சிப்பார்கள். அவர்களுக்கு நிதிரீதியாக  உதவ நீங்கள் முன்வரும் தருணத்தில் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு மனம் உடைந்து பின்னர் கவலையற்றவர்களாக இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். 

உங்களது எதிர்காலத்தைப் பற்றி பேசும்போது நிதி பொறுப்பை பகிர்ந்து கொள்ளாதது 


உங்கள் பார்ட்னர்  விலையுயர்ந்த கார் வாங்குவது அல்லது உங்களுடன் சேர்ந்து பெரிய வீடு வாங்குவது பற்றி கனவு காணலாம். ஆனால் அதற்காக அவர்கள் கடினமாக உழைக்க விரும்பமாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில், உங்கள் பார்ட்னர் வேலையில்லாமல் இருப்பதுடன் உங்களுக்காக நேரத்தை செலவழிப்பதாக உங்களை நம்ப வைக்க நினைப்பார்கள். இதுபோன்ற நபர்கள் உங்களுடன் எந்த செலவுகளையும் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். 

நீங்கள் உதவி கேட்கும்போது எதையாவது சொல்லி சமாளிப்பது 


உங்களிடம் உண்மையாக இருக்கும் காதலி  உதவி  உங்களுக்கு தேவைப்படும் போது உதவுவதற்கு எந்த எல்லைக்கும் செல்ல நினைப்பார்கள். ஆனால் உங்கள் பார்ட்னர் சாக்குகளைச் சொல்ல முயன்றால் அல்லது அவர்களிடம் பண உதவி கேட்கும்போது அவர்களின் நிதி நிலை குறித்து உணர்ச்சிவசப்பட்டால், அவர்களின் நோக்கங்கள் சரியானவையாக இருக்காது  என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சில சமயங்களில் பண விஷயங்களைக் கையாள்வதில் உங்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். ஆனால் உங்கள் பார்ட்னர் ஒரு முறை கூட  உதவி செய்ய  மறுத்தால், அவர்கள் உங்கள் காதலுக்கு தகுதியற்றவர்கள். 

வேலை,பணம் தொடர்பாக கெட்ட பெயர் எடுப்பது  

நீங்கள் உங்கள் காதலரை எவ்வளவு நேசித்தாலும், இந்த அறிகுறியை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பார்ட்னர் நிதிரீதியாக பொறுப்பற்றவர் அல்லது பணி விதிகளை அவமதிப்பது போன்ற ஒரு சிறிய குறிப்பும் கூட உண்மையாக மாறலாம். அவர்கள் ஒருவேளை அவ்வாறு செய்தால், உங்கள் பார்ட்னர் உங்களிடம் ஆதரவிற்காக மட்டுமே உங்களை நேசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

எப்போதும் உங்கள் பணத்தை பற்றி மட்டுமே பேசுவது 


தங்கள் பணத்தைப் பற்றி பேசுவதை அவர்கள் வெறுக்க நினைக்கிறார்கள். ஆனால் உங்கள் பணத்தை பார்ட்னர் எப்படி, எங்கு செலவிட வேண்டும் என அவர்களுக்கு விவாதிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. நிதிரீதியாக கையாளும் நபர்கள் அவர்களது ஆலோசனைகளை வழங்க விரும்புகிறார்கள், மேலும் மெதுவாக உங்கள் பணத்தையும் கட்டுப்படுத்த நினைப்பார்கள். இதையடுத்து  உங்கள் உணர்ச்சிகளுக்கு அவர்கள் செவிசாய்க்காமல் நிதி தொடர்பான தேவையற்ற சண்டைகளையும் உருவாக்குவார்கள். மோசமான விஷயம் என்னவென்றால், தங்கள் பணத்தை அவர்கள்  எங்கு செலவிடுகிறார்கள் என்று கூட சொல்ல விரும்ப மாட்டார்கள்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top