டயட் ஸ்பெஷல் மூங்லெட் செய்வோமா?

ஓவர் வெயிட் பார்ட்டிகளுக்கு, எளிதாக அதேசமயம் வித்தியாசமான சுவையில் பல ரெசிபிகள் கொட்டிக்கிடக்கிறது. மனமிருந்தால் மார்க்க பந்து!!! தேடுதல் வேட்டையில் கிடைத்த சூப்பர் ரெசிபி தான் மூங்லெட்.

பெயரை கேட்டதும் மூங்கில் அரிசியால் செய்ததுன்னு நினைக்க வேண்டாம். நம் சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டு ருசியான, சத்தான உணவு சமைத்து பார்ப்போம்!

Paasi Payaru

“மூங்”, என்பது ஹிந்தியில் நம்ம ஊரு பாசிப்பருப்புக்கு தான் அந்த பெயர். எடை குறைப்பில் இருக்கும் போது கலோரி மதிப்பு குறைவானதாக, புரோட்டின் அதிகமாக, கார்போஹைடிரேட் இல்லாத… வெஜிடபிள் நிறைய சேர்த்த என ஆயிரம் கண்டிஷன்களுடன் தேடும் போது கிடைத்த அற்புதமே இந்த மூங்லெட் – moong dhal omlet.

வேகன் டயட்டில் இருக்கும் நபர்கள் கூட இந்த ஆம்லெட்டை உண்ணலாம். உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர உடற்பயிற்சியுடன் போதுமான சத்தான உணவுகளும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

Preparation time – 20minutes
Cooking time – 5 minutes for each omlet
Category – Indian pancake / veg

தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – 1 கப்
வெங்காயம் – 1
பீட்ரூட்
முட்டை கோஸ்
கேரட்
குடைமிளகாய்
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய்
மிளகாய்

செய்முறை :
* பாசிப்பருப்பை அரைமணி நேரத்திற்கு மேல் ஊறவைக்கவும்.
* ஊறிய பாசிப்பருப்பை மசிய அரைக்கவும்.

Omelette

* உப்பு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, காய்கறி கலவைகளை கலந்து நம்ம ஊரு அடைப்போலவோ அல்லது கெட்டியான தோசையாக சுட்டு அதன் மீது இந்த கலவைகளை தூவியோ சாப்பிடலாம்.

சமையலில் ஆர்வம் இருந்தால் போதும் பெண்களுக்கு தான் கற்பனைக்கு பஞ்சமா என்ன?

மூங்லெட், மூங்தால் பிட்ஸா, மூங்தால் ஊத்தப்பம்…. என்னப் பெயர் கொண்டு அழைத்தாலும் சுவை இருந்தால் போதும் தானே!


Moonglet or moong dhal omelette is a healthy delicious and perfect weight loss recipe. It is a vegetarian omelette filled with more vegetables(carrot, capsicum, beetroot, cabbage, onion), less calories and high proteins. Moonglet is a popular street food of Delhi region. Moong Dal or Paasi payaru is soaked in water for more than 30 minutes before start preparing the recipe. It may be a tasty breakfast option.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course