நீராவி பிடிப்பதால் நம் உடலில் உள்ள சளி, இருமல், நுரையீரல் பிரச்சனைகள் எல்லாம் சுலபமாக சரி ஆகும். நீராவி பிடிப்பது உடலுக்கு அவ்வளவு நல்லது. அது தலையில் உள்ள பித்தத்தை நீக்குவதோடு சுவாச பாதையில் உள்ள சிக்கல்களை சரி செய்யும். இப்போது கொரோனா மூக்கு தொண்டை வழியாக நுரையீரலை அடைவதால், அதை முதல் படியிலேயே வீழ்த்த வேண்டும்.

அதற்கு நீராவி பிடிப்பது நல்ல பலனை தரும் என பல மருத்துவர்கள் தற்போது அறிவுறுத்தி வருகின்றனர். நீராவி பிடிப்பதில் பல வழிகள் மற்றும் முறைகள் உள்ளது. அதில் மிகவும் முக்கியமான சில முறைகளை பார்க்கலாம்.
நீராவி பிடிப்பது எப்படி?

முதல் முறை:

- முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும், அதை நன்கு கொதிக்க வைத்து அதில் சிறிது மஞ்சள் தூள், ஒரு கை அளவு வேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- வேப்பிலை நன்கு வெந்தவுடன், அவை கீழே இறங்கும் அப்போது அதை சிறிது நேரம் மூடி வைத்து விட்டு, போர்வை போட்டு மூடி, அதாவது மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வருவது போன்று ஆவி பிடிக்க வேண்டும்.
இரண்டாம் முறை :

இதில் வேப்பிலைக்கு பதில் கற்பூரவள்ளி, மஞ்சள் சேர்த்து நீராவி பிடிக்கலாம்.
மூன்றாம் முறை;

இதில் புதினா, துளசி இலை, மஞ்சள் சேர்த்தும் நீராவி பிடிப்பது நெஞ்சு சளியை குறைக்கும்.
நான்காம் முறை:

இதில் விக்ஸ் [vicks ] சேர்த்து நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும். இப்படி வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நீராவி பிடிப்பதன் மூலம் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க முடியும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






