
பொதுவாக நம்மிடையே நிலவும் ஒரு கருத்து வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பது தான்.உணவியல் நிபுணர்களின் கருத்து என்னவென்றால் உடல் எடையை அதிகரிக்கும் ஆனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் …அதே வடிவேல் நகைச்சுவை மாதிரியே இருக்கும் ஆனால் இருக்காது என்பது நினைவுக்கு வருகிறதா? வாழைப்பழத்தை பற்றி நிருபர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தரும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம் , மக்னீசியம் மற்றும் விட்டமின் ஏ,சி என்று உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பழம். இதன் அருமை தெரிந்ததால் தான் முக்கனிகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
வாழைப்பழம் உடல் எடையை குறைக்க உதவுமா?
வாழைப்பழத்தில் நார்சத்து நிறைந்து உள்ளது.ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளும் போது வயிறு நிறைந்த உணர்வு. மேலும் வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் மெட்டபாலிசத்தை தூண்டுவதால் கொழுப்புகள் உடலில் சேமிக்க படுவதில்லை. Food cravings எனப்படும் உணவின் மீதான ஆர்வம் குறைகிறது. இதனால் தான் உடல் எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் வாழைப்பழம் , பால் , ஆளிவிதை சேர்த்து ஸ்மூத்தி குடிக்கிறார்கள்.
வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்குமா?

ஆம்…. வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்கும் என்று தான் உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வாழைப்பழமானது low glycemic index number கொண்டுள்ளதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.மேலும் இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இதனால் இதயக்கோளாறுகள் வருவதைத் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க என்று எதற்கு ஜிம் பயிற்சிக்கு சென்றாலும் உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும் உண்ணத் தகுந்த பழம் வாழைப்பழம் . உடனடியாக உடலுக்கு ஆற்றல் தரும். வாழைப்பழத்தால் அதிகரிக்கும் உடல் எடையானது ஆரோக்கியமானது.
நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல வாழைப்பழத்தில் இரண்டு நன்மைகள் உள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






