நாம் இந்த ஆசனத்தை மேற்கொள்வதால் நீரிழிவு நோய் வராமல் தவிர்ப்பதற்கும் ,முதுகுவலி குறைப்பதற்கும் ,இடுப்பு பகுதி வாய்வு பிடிப்பு சரியாவதற்கும் அடிவயிற்று உறுப்புகளுக்கு மசாஜ் செய்வது போன்ற உணர்வு உண்டாக்குகிறது.
தரையில் போர்வையை விரித்து கால்களை நீட்டி உட்காரவும்.பின்னர் வலது காலை இடது காலின் மேல் அடிப்பகுதியில் மடக்கி வைத்துக்கொள்ளவும்.
முன்பக்கம் நோக்கியபடி வலது பாதத்தின் விரல்கள் இருக்கட்டும. இடது காலை மடக்கி பாதத்தை புட்டத்துக்கு வலப்புறமாக கொண்டு வரவும். பாதம் தரையை ஒட்டிக்கொண்டு இருக்கட்டும்.

இப்போது இடது முழங்காலுக்கு வெளியே வலதுகையை கொண்டு வந்து இடது காலின் பாதத்தை பிடித்துக்கொள்ளவும். பொறுமையாக நிமிர்ந்து உட்கார்ந்து நிதானமாக தலையையும் மார்பையும் இடது புறம் திருப்பவும்.
பின்புறமாக அதாவது முதுகுக்கு பின்புறமாக இடது கையை கொண்டு சென்று தொடை அல்லது வலது கணுக்கால் பகுதியை சேர்த்துகொள்ளட்டும். இந்த நிலையில் சில நொடிகளிலிருந்து ஆரம்பத்தில் இயல்பு நிலைக்கு திரும்பவும்.
ஓய்வு சில நிமிடங்கள் எடுத்துவிட்டு பிறகு காலை மாற்றி ஆசனத்தை செய்யவும். தொடர்ந்து செய்ய செய்ய நேரத்தை சில நொடிகள் அதிகரித்து கொள்ளவும்.
முழங்கால் பாதிப்பு , முதுகுத்தண்டு பாதிப்பு உள்ளவர்கள், வயிற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் முடிந்த வரை செய்யாதிருக்கவும். ஆசைப்பட்டால் தகுந்த யோகா பயிற்சியாளரின் அறிவுரையை கேட்டு செய்யலாம்.

பலன்கள்
மசாஜ் செய்வது போன்ற உணர்வு அடிவயிற்று பாகங்களுக்கு உண்டாகும். குடல் உறுப்புகள் பலப்படும்.
தண்டுவட இணைப்பு ஊக்குவிக்கிறது.
செரிமான குறைபாடு சீராக்குகிறது .
நீரிழிவு நோய் வராமல் தடுத்து, முதுகுவலி குறைத்து , இடுப்பு பகுதி வாய்வு பிடிப்பை சரிபடுத்துகிறது.
சிறுநீர்ப் பாதை பாதிப்புகளை குணமாகிறது.சிறுநீரகங்கள் தூண்டப்படும்.
விலா எலும்புகள் பலமடையும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






